சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த ட்ரம்ப் நிர்வாகம் வகுத்துள்ள மிகப்பெரிய திட்டம் – முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி !!

  • Tamil Defense
  • July 21, 2020
  • Comments Off on சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த ட்ரம்ப் நிர்வாகம் வகுத்துள்ள மிகப்பெரிய திட்டம் – முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி !!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற மிக முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தவர் ஸ்டீஃபன் கெவின் பான்னன்.
அதிபர் ட்ரம்ப் உடைய வெற்றிக்கு பின்னரும் வெள்ளை மாளிகையில் தலைமை வியூக அமைப்பாளராக அவர் பணியாற்றினார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளதாக கூறியுள்ளார். இதில் இந்தியா, ஜப்பான் உட்பட பல நட்பு நாடுகளை ஆதரிப்பதும் அடங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கான திட்டத்தில் மிக முக்கிய பங்காற்றும் நால்வர் அணியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரையன், அமெரிக்க தலைமை சட்ட அதிகாரி வில்லியம் பார் ஆகியோர் அடங்குவர்.

இவர்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை தவிர மற்ற அனைவரும் சீன விவகாரத்தில் முக்கியமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர், அவரும் கூடிய விரைவில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஐந்தாவது நபராக ஸ்டீவன் டர்னர் முச்சின் அவர்களையும் இந்த நால்வர் கூட்டணியில் இணைக்க விரும்புகிறார்.