ஷாங்காய் நகருக்கு மிக அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்; அதிகரிக்கும் பதற்றம் !!

  • Tamil Defense
  • July 28, 2020
  • Comments Off on ஷாங்காய் நகருக்கு மிக அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்; அதிகரிக்கும் பதற்றம் !!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி8 மற்றும் இ.பி-3இ விமானங்கள் சீன நிலபரப்புக்கு மிக அருகே பறந்துள்ள நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விமானங்கள் தைவான் ஜலஸந்தி வழியாக பறந்து, ஃபூஜியான் மற்றும் ஷெய்ஜாங் ஆகிய கடலோர பகுதிகளுக்கு மிக அருகே பறந்துள்ளன.

அமெரிக்க பி8 விமானம் ஷாங்காய் நகரிலிருந்து வெறுமனே 76கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது, மேலும் மற்றோரு விமானம் ஃபூஜியான் கடற்கரை பகுதியில் இருந்து வெறுமனே 106கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது.

இதில் பி8 விமானம் அருகில் இருந்த அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். ரஃபயெல் பரேட்டா எனும் நாசகாரி போர்க்கப்பலுடன் இணைந்து செயல்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு இவ்வளவு மிக நெருங்கி அமெரிக்க விமானங்கள் பறந்துள்ளது மிகுந்த பதற்றத்தை உருவாக்கி உள்ளது.