அமெரிக்காவின் F-16C விமானம் விபத்து
1 min read

அமெரிக்காவின் F-16C விமானம் விபத்து

நியு மெக்சிகோவின் ஹோலோமான் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மே முதல் இதுவரை கிட்டத்தட்ட ஐந்து இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

அங்கு மாலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விமானி பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.இந்த விமானம் 49வது விங்கை சேர்ந்தது.

விபத்து குறித்து அறிய தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடைசி இரு மாதத்தில் மட்டும் அமெரிக்க விமானப்படை ஐந்து விமானங்களை இழந்துள்ளது.இதில் இரு விமானிகளும் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.