
இந்தியா சீனாவிற்கு இடையிலான மோதல் நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு அருகே உள்ள எல்லா நாடுகளிலும் சீனா தனது கோபத்தை காட்டி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்க கடற்படை இரு விமானம் தாங்கி கப்பல்களை தென்சீனக் கடலில் நிறுத்தியுள்ளது.எங்களது இராணுவ பலம் சக்திவாய்ந்தது.உலகின் எங்கு பிரச்சனை வந்தாலும் எங்களது இராணுவம் பலத்துடன் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.
தற்போது எல்லைப்பகுதியின் கோக்ரா,ஹாட் ஸ்பிரிங் மற்றும் கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது இராணுவத்தை பின்நோக்கி நகர்த்தியுள்ளது.
லடாக்கில் மட்டுமே சீனா பிரச்சனை செய்யவில்லை.தென்சீனக் கடலில் உள்ள அனைத்து நாடுகளிலும் வம்பிழுத்துள்ளது.
வியட்நாம்,பிலிப்பைன்ஸ்,மலேசியா,புருனே மற்றும் தைவான் என இந்த நாடுகளுக்கு உரிமையான பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
தென் மற்றும் கிழக்கு சீனக்கடல் பகுதிகள் தாதுப்பொருள்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.எனவே இந்த பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது.