இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதலில் முதலிடம் பெற விரும்புகிறோம்: பெண்டகன் மூத்த அதிகாரி !!
1 min read

இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதலில் முதலிடம் பெற விரும்புகிறோம்: பெண்டகன் மூத்த அதிகாரி !!

செவ்வாய் கிழமை அன்று மூத்த பெண்டகன் அதிகாரியான எல்லன் எம் லார்டு கடந்த பத்தாண்டுகளில் இந்திய அமெரிக்க பாதுகாப்பு உறவு பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறினார்.

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிக அளவில் அமெரிக்க தளவாடங்களை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசுகையில் இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலில் அமெரிக்கா முதலிடம் பிடிக்க கடும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.