ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீது பொய் பழி போட முயன்ற சீனா தடுத்த ஜெர்மனி மற்றும் அமெரிக்கா !!

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மீது பொய் பழி போட முயன்ற சீனா தடுத்த ஜெர்மனி மற்றும் அமெரிக்கா !!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக கூறி நம் நாட்டிற்கு எதிராக சீனா கொண்டு வர முயன்ற தீர்மானத்தை ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தடுத்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை அன்று பாகிஸ்தானுடைய கராச்சி நகரத்தில் பலூச் விடுதலை படையை சேர்ந்த நான்கு பேர் பாகிஸ்தான் பங்குசந்தை மீது தாக்குதல் நடத்தினர், இதில் 10பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி ஆகியோர் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்தனர்.

இதனையடுத்து சீனா ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது, அதில் இந்த கொடுர தாக்குதலை நடத்த உதவி புரிந்தவர்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்பட வேண்டும், இது சம்பந்தமான விசாரணைகளில் பாகிஸ்தான் அரசுடன் அவர்கள் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்தியா மீது பழிசுமத்துவது அபாண்டமானது, இதனை ஏற்று கொள்ள முடியாது என கூறி சீனாவின் நடவடிக்கையை தடுத்துள்ளனர்.