
அமெரிக்க அரசு தென்கொரியா மற்றும் ஜெர்மனியில் உள்ள தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க படையினர் நிலைநிறுத்தபட்டு உள்ளனர். தற்போது அவர்களுக்கான செலவு விகிதத்தை தென் கொரியா அதிகம் ஏற்றுக்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டும் தென் கொரிய அரசிடம் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் படைக்குறைப்பு நடவடிக்கை குறித்து அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பரிசிலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், வடகொரியா சீனாவை எதிர்க்க தென்கொரியாவில் அமெரிக்க படையினர் இருப்பது இன்றியமையாதது என வலியுறுத்தி உள்ளனர்.
அதை போலவே ஜெர்மனியில் இருந்தும் தனது படைகளை குறைக்க அமெரிக்க அரசு சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அதாவது ஒவ்வொரு நேட்டோ உறுப்பு நாடும் தனது ஜிடிபியில் 2% ராணுவத்திற்கு செலவிட வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால் ஜெர்மனி அரசு தனது ஜிடிபியில் 1.4% மட்டுமே செலவிடுகிறது.
இதனையடுத்து அமெரிக்க அரசு சுமார் 9,500 வீரர்களை ஜெர்மனியில் இருந்து விலக்கி போலந்து நாட்டில் நிலைநிறுத்த யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு ஜெர்மானிய பாதுகாப்பு அமைச்சர் ஆன்னிக்ரேட் க்ரான் கேரன்பாயர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மைக் பாம்பியோ அமெரிக்க படைகள் எல்லாம் சீனாவை மனதில் வைத்து நகர்த்தப்படும் எனவும் கூறியுள்ளார்.