ஒலியை விட 17 மடங்கு வேகத்தில் செல்லும் அமெரிக்க ஆயுதம் சோதனை ??

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on ஒலியை விட 17 மடங்கு வேகத்தில் செல்லும் அமெரிக்க ஆயுதம் சோதனை ??

சமீபத்தில் அமெரிக்கா ஒலியை விடவும் 17 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆயுதம் ஒரு ஹைப்பர்சானிக் மிதவை வாகனம் எனவும் இதனால் அணு ஆயுதங்களை சுமக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா ஒலியை விடவும் 17 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும் ஆயுதம் ஒன்றை சோதனை செய்ய உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

மூத்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் அவர் குறிப்பிட்ட ஆயுதம் தான் சோதனை செய்யப்பட்டு உள்ளது, மேலும் அவரது நேரடி ஆதரவும் ஆர்வமும் உள்ளது” என்றார்.

அமெரிக்கா அடுத்த 4 வருடங்களில் பஸிஃபிக் பெருங்கடல் பகுதியில் 40க்கும் அதிகமான ஹைப்பர்சானிக் ஆயுத சோதனைகளை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.