
ஹீவாய் நிறுவனம் சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
உலகின் பல்வேறு நாடுகளில் பணிகளை பெற்றுள்ள ஹூவாய் நிறுவனம் மீது நீண்ட காலமாகவே நம்பகத்தன்மை அற்ற நிறுவனம் என ஒரு குற்றச்சாட்டு உண்டு.
அந்த வகையில் அமெரிக்கா ஹீவாய் நிறுவனத்தை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தான நிறுவனமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் உடைய தலைவர் அஜித் பாய் இதுகுறித்து பேசுகையில் இந்த அமைப்பின் 8.3 பில்லியன் டாலர்கள் பணத்தை ஹீவாய் நிறுவன பொருட்களை வாங்கவோ மேம்படுத்தவோ பயன்படுத்த முடியாது என கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் சீன நாட்டு சட்டப்படி ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்பு காரணமாக அந்நாட்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க ஒப்பு கொண்டுள்ளது.
ஆகவே ஏதேனும் குறைபாடுகள் இருக்கையில் அதனை சீன அரசு பயன்படுத்தி கொண்டு அமெரிக்காவின் பாதுகாப்பை சீர்குலைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹூவாய் நிறுவனமானது சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன ராணுவத்துடனும் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.