பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • July 16, 2020
  • Comments Off on பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என சீனா எச்சரிக்கை !!

அமெரிக்கா தென் சீன கடல் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் ஊதி பெரிதாக்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில நாட்கள் முன்பு அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சீனா மலேசிய, வியட்நாம், ப்ருனய், இந்தோனேசியா, ஃபிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடல் பகுதிகள் மீது உரிமை கோருவது சட்ட விரோதமானது என தெரிவித்து இருந்தது.

மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சீனா தனது பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளை அச்சுறுத்தி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து சீனா அமெரிக்காவிற்கு மேற்குறிப்பிட்ட வகையில் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.