
தென்சீனக் கடலில் உள்ள பல சிறிய நாடுகளுடன் சீனா அடிக்கடி வம்பிழுத்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க கடற்படை தனது இரு பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை தென்சீனக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
USS Nimitz மற்றும் USS Ronald Reagen ஆகிய இரு விமானம் தாங்கி கப்பல்களும் தென்சீனக் கடலில் உள்ளதாக அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
தடையில்லா மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் என்பதின் கீழ் தான் அமெரிக்கா தனது இரு கப்பல்களையும் ஆபரேசனுக்காக அனுப்பியுள்ளது.இந்த இரு போர்க்கப்பல்களுடன் மேலும் நான்கு கப்பல்களும் விமானங்களும் இணைந்து போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
பாராசெல் தீவுகள் அருகே சீனாவும் ஐந்து நாள் போர்பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த பாரசெல் தீவுகள் வியட்நாமிக்கு சொந்தமானது ஆகும்.இவற்றை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.சீனாவின் இந்த பயிற்சி அந்த பகுதியின் ஸ்திரதன்மையை குழைக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது.