
அமெரிக்கா சமீபத்தில் தனது இரண்டு ராட்சத அணுசக்தியால் இயங்கும் இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை தென்சீன கடல்பகுதிக்கு அனுப்பி வைத்தது.
ஏற்கனவே இவற்றின் தாக்குதல் படையணிகளும் அப்பகுதியில் உள்ள நிலையில் தற்போது தனது குண்டுவீச்சு விமானங்களையும் இப்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது.
லூசியானாவில் இருந்து புறப்பட்ட இந்த தொலைதூர சப்சானிக் b52 குண்டுவீச்சு விமானங்கள் தற்போது அமெரிக்க விமானந்தாங்கி படையணிகளுடன் இணைந்து விட்டன.
நேற்று அமெரிக்க கடற்படையை சீனா ஏவுகணைகளை காட்டி மிரட்ட முற்பட்ட நிலையில் தற்போது இந்த விமானங்களை அமெரிக்கா தனது பலத்தை காட்டும் வகையில் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.