
இந்தோனேசியாவின் கோரிக்கைபடி அந்நாட்டிற்கு 8 ஆஸ்ப்ரே வானூர்திகளை விற்கு அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க காங்கிரஸிற்கு அந்நாட்டு அரசு அறிவிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
8 ஆஸ்ப்ரே வானூர்திகள், ரேடார்கள், ஆயுதங்கள், முன்னெச்சரிக்கை அமைப்புகள் என மொத்தமாக இந்த ஒப்பந்தம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரின் மேலேழும்பும் தன்மையும் விமானத்தை போல பறக்கும் தன்மையும் ஒரு சேர கொண்ட இது தனித்துவமான வானூர்தி ஆகும். இதை போல வடிவமைக்கப்பட்ட வானூர்தி வேறு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தில் பெல் டெக்ஸ்ட்ரான் மற்றும் போயிங் நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.