
தென் சீனக் கடலில் இரு விமானம் தாங்கி கப்பல்களின் உதவியுடன் மிக மிக அரிதாக போர்பயிற்சியை தொடர்கிறது அமெரிக்க கடற்படை.
USS ரொனால்டு ரீகன் மற்றும் USS நிமிட்ஸ் ஆகிய இரு போர்க்கப்பல்கள் குழு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.க்ரூசர் ரக போர்க்கப்பல்கள்,டெஸ்ட்ராயர் போர் கப்பல்கள் மற்றும் 12000 வீரர்கள் என மாபெரும் பயிற்சி நடைபெறுகிறது.
120 போர் விமானங்களுடன் ஒரு சிறிய விமானப்படையாகவே பல்வறேு ரகமாக போர்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.போரின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த மாதத்திலேயே போர்பயிற்சி நடப்பது இது இரண்டாவது முறையாகும்.இதற்கு முன் 2014 மற்றும் 2001ல் இத்தகைய போர்பயிற்சிகள் நடந்துள்ளன.
தென்சீனக்கடலில் கிட்டத்தட்ட 1.3மில்லியன் சதுர மைல் பரப்பளவை சீனா தன்னுடையது எனக்கூறி வருகிறது.
அமெரிக்கா இதை சட்டவிரோதம் எனக்கூறி வருகிறது.