இந்திய விமானப்படைக்கு புதிய எஃப்15 இ.எக்ஸ் போர் விமானத்தை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா !!
இந்திய விமானப்படைக்கு 114 பல்திறன் போர்விமானங்களை வாங்குவதற்கான திட்டம் செயலில் உள்ளதை அறிவோம்.
இதில் அமெரிக்கா சார்பில் ஏற்கனவே போயிங் நிறுவனம் தனது F/A-18 சூப்பர் ஹார்னெட் ப்ளாக் 3 ரக விமானத்தையும், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தனது F21விமானத்தையும் போட்டி களத்தில் இறக்கி இருந்தன.
தற்போது இந்திய கடற்படைக்கு F/A-18 சூப்பர் ஹார்னெட் ப்ளாக்3 விமானத்தை போயிங் நிறுவனம் பிரதான படுத்தி உள்ள அதே நேரத்தில் தனது புதிய தயாரிப்பான அதிநவீன F-15EX விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்க முன்வந்துள்ளது .
இதில் இந்திய கடற்படைக்கு F/A-18 விமானங்களை தயாரிக்கும் பணியை நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் மற்றும் மஹிந்த்ரா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க போயிங் முன்வந்தது, இதே நடைமுறையை F15 விமான ஒப்பந்தம் நிகழ்ந்தால் பின்பற்ற போயிங் நிறுவனம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த F-15EX ரகமானது அமெரிக்கா ஏற்கனவே பயன்படுத்தி வரும் F15 போர் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு ஆகும்.