சீனத் தூதரகத்தை மூடிவிட்டு கிளம்புங்கள்: அமெரிக்கா அதிர்ச்சி முடிவு
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீன உறவு அனைத்து வகையிலும் மோசமடைந்து வரும் நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா இந்த ஒருவழி முடிவை கைவிடாவிட்டால் இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என சீனா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.அமெரிக்கா சீன டிப்ளோமேட்டிக் அதிகாரிகளை தொந்தரவு செய்வதாகவும் காரணமில்லாமல் சீனர்களின் உடமைகளை சோதனையிடுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவை உடனடியாக இந்த முடிவுக்கு கொண்டு சென்றது எது என தெரியவில்லை.மேற்கு நாடுகளின் 11 நிறுவனங்கள் கொரானா பற்றி செய்து வந்த ஆராய்ச்சி குறித்த தகவல்களை சீன ஹேக்கர்கள் களவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு இந்த தூதரகத்தில் தீபரவியதாகவும் அதை அணைக்க அங்குள்ள தீயணைப்பு வீரர்கள் சென்ற போது அதற்கு சீன அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.