
நேற்று முன்தினம் அமெரிக்க கடற்படையின் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் இந்திய பெருங்கடல் நோக்கி அதிவேகத்தில் விரைவதாக பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் அக்கப்பல் நேற்று காலையே இந்திய பெருங்கடல் பகுதியில் வந்து சேர்த்துள்ளது.
இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் அந்தமான் அருகே போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவுடனான பிரச்சினை நடைபெறும் சமயத்தில் இந்த நிகழ்வு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத இறுதியில் இதை போல ஜப்பானிய கடற்படையுடன் இந்திய கடற்படை பயிற்சி மேற்கொண்டது கூடுதல் தகவலாகும்.