சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தேசிய பாதுகாப்பு காரணங்கள் காரணமாக டிக் டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க அரசு பரிசிலனை செய்து வருவதாக கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பதற்கு முன்னர் நான் எதையும் கூற விரும்பவில்லை ஆனால் டிக் டாக் தடை என்பது பரிசிலிக்கப்ட்டு வருவதாக அவர் கூறினார்.
பல அமெரிக்க அரசியல் தலைவர்களும் டிக் டாக்கை தடை செய்ய வேண்டுமென கூறி வருகின்றனர்.
சக்திவாய்ந்த செனட்டரான ஜாண் கார்னின் சமீபத்தில் ட்விட்டரில் இந்தியா 59 சீன செயலிகளை தடை செய்ததை பதிவிட்டு உள்ளார்.
அதை போல குடியரசு கட்சியை சேர்நத காங்கிரஸ் உறுப்பினர் ரிக் க்ராவ்ஃபோர்டு “டிக் டாக் விரைவில் தடை செய்யப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ராபர்ட் ஒ ப்ரையன் டிக் டாக் செயலியை சீன அரசு தனது அரசியல் சார்ந்த நலன்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் அவர் பேசுகையில் 4 கோடி அமெரிக்க பயனர்களை கொண்ட டிக் டாக் செயலியில் சீன அரசின் நடவடிக்கைகளல விமர்ச்சிக்கும் வகையிலான டிக் பக்கங்கள் முடக்கப்படுவதாக அல்லது நீக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.