ஆளில்லா விமான ஏற்றுமதிக்காக தடைகளை குறைக்கும் அமெரிக்கா; இந்தியா பயன்பெறுமா?
1 min read

ஆளில்லா விமான ஏற்றுமதிக்காக தடைகளை குறைக்கும் அமெரிக்கா; இந்தியா பயன்பெறுமா?

அமெரிக்க அரசு ஆளில்லா ட்ரோன்களை ஏற்றுமதி செய்வதற்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதன்படி அதிகபட்சமாக சுமார் 800கிமீ வேகத்தில் பறக்கும் ட்ரோன்களை அமெரிக்கா எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும்.

இதன் காரணமாக 800கிமீ பிரிவை சேர்ந்த ப்ரிடேட்டர் பி மற்றும் க்ளோபல் ஹாவ்க் கண்காணிப்பு ட்ரோன்களை இந்தியா பெற்று கொள்வது எளிது.

மேலும் இந்திய துணை கண்டத்தில் சீனாவின் விங் லூங் ஆளில்லா ட்ரோன்களுடைய வரவு இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் வெற்றிகரமாக செயல்பட்ட ப்ரிடேட்டர் பி மற்றும் க்ளோபல் ஹாவ்க் ட்ரோன்களை இந்தியா பெற விரும்புகிறது.

ப்ரிடேட்டர் பி ட்ரோன் கார்டியன் ட்ரோனுடைய ஆயுதம் தாங்கிய வடிவமாகும், இது 4 ஹெல்ஃபயர் ஏவுகணைகள் மற்றும் 2 – 227 கிலோ லேஸர் வழிகாட்டப்பட்ட குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது.

இத்தகைய ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.