
தனது வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் இருந்து இயங்கி வரும் திபெத்திய அரசுக்கு அமெரிக்கா நேரடியாக நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலா நகரில் இருந்து கயங்கி வரும் திபெத்திய அரசுக்கு அமெரிக்கா சுமார் 1 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு திபெத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கான அதிபர் ட்ரம்பின் முடிவாக பார்க்கப்படுகிறது.
இது சீனாவை நேரடியாக வெறுப்பேற்றும் என்பதில் எவ்வித ஐயமில்லை.