
அமெரிக்க அரசு சீனாவில் பல்வேறு காரணங்களால் தங்கி இருக்கும் அமெரிக்க மக்களுக்கு கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க சீனா இடையிலான மோதல் தினமும் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அரசு சீனாவில் வசிக்கும் அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு தீடிரென கைது செய்யலாம், மிக நீண்ட காலம் விசாரணை மற்றும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
அதிலும் சீன அரசை விமர்சிப்பது போன்ற குறுஞ்செய்திகளை அனுப்புவது போன்றவை முகாந்திரமாக காட்டப்படலாம்.
ஆகவே அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
மேலும் சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் பற்றிய தகவலையும் விரிவாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.