எந்த சீன அதிகாரிகளை குறிவைக்க வேண்டும் என்ற பட்டியல் வழங்கிய அமெரிக்கா, இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலுக்கும் கோரிக்கை !!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உள்ளார்.
அப்போது மனித உரிமை மீறல் காரணமாக குறிவைக்க வேண்டிய சீன அதிகாரிகளின் பட்டியல் இங்கிலாந்து அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
பிரதமர் போரிஸ் ஜாண்ஸனுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இருதரப்பில் இருந்தும் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.