சாபஹாரில் என்ன செய்ய வேண்டுமென அமெரிக்கா எங்களுக்கு கற்பிக்க முடியாது : இந்தியா !!

  • Tamil Defense
  • July 25, 2020
  • Comments Off on சாபஹாரில் என்ன செய்ய வேண்டுமென அமெரிக்கா எங்களுக்கு கற்பிக்க முடியாது : இந்தியா !!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பேசிய ஈரானுக்கான இந்திய தூதர் கத்தாம் தர்மேந்திரா ” ஈரானுடன் அவர்கள் நாட்டு பணமான ரியாலில் வர்த்தகம் செய்யும் ஒரே நாடு இந்தியா எனவும்,

இது சாரந்த பண பரிமாற்றத்திற்காகவே இந்தியா தரப்பில் யூகோ வங்கி மற்றும் ஈரான் தரப்பில் ஆறு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஈரானிய மத்திய வங்கி ஆகியவை தான் தேர்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் பேசுகையில் நாங்கள் சாபஹாரை மேம்படுத்துகிறோம், கருவிகளை வாங்குகிறோம், சாபஹாருக்காக தயாராகி வருகிறோம்,

அதனால் அமெரிக்கர்களிடம் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் கூற முடியாது என தெரிவித்துவிட்டோம் என்றார்.