திருட்டுத்தனமாக அமெரிக்காவில் பணியாற்றி முக்கிய தகவல்களை திருடிய 3 சீன ராணுவ வீரர்கள் கைது !!

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on திருட்டுத்தனமாக அமெரிக்காவில் பணியாற்றி முக்கிய தகவல்களை திருடிய 3 சீன ராணுவ வீரர்கள் கைது !!

அமெரிக்காவில் தங்களது சீன ராணுவ அடையாளங்கள் மற்றும் தொடர்புகளை மறைத்து பணியாற்றி வந்த மூன்று சீன ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இருந்த நான்காவது நபர் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் உள்ள சீன தூதரகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யபட்ட மூன்று பேரும் அமெரிக்க
பாதுகாப்பு துறை நிறுவனங்களிலும், மருத்துவ ஆராய்ச்சி கூடங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர்.

அமெரிக்க அரசு தரப்பில் சீன அரசு தனது ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் வீரர்களை அவர்களது அடையாளங்களை மறைத்து அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் அங்கு பணியாற்றுகையில் முக்கிய தகவல்களை திருடி சீன அரசுக்கு வழங்கி வருகின்றனர், இத்தகைய நடவடிக்கை காரணமாகவே ஹூஸ்டன் நகரில் உள்ள தூதரகத்தை அமெரிக்க அரசு முடியது.

அமெரிக்க எஃப்.பி.ஐ நாடு முழுவதும் சீன ராணுவத்துடன் தொடர்புடைய 25 பேரை கண்டுபிடித்து விசாரித்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.