தைவானுடைய பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை புதுப்பிக்க அமெரிக்க அரசு ஒப்புதல் !!
1 min read

தைவானுடைய பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை புதுப்பிக்க அமெரிக்க அரசு ஒப்புதல் !!

தைவான் மிக நீண்ட காலமாகவே சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல்களை சந்தித்து உள்ளது, தற்போது இது பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் தைவான் தன்னால் இயன்ற அளவுக்கு தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பல்வேறு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கியும், ஏற்கனவே தன்னிடம் உள்ளவற்றை மேம்படுத்தியும் வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து முன்னர் வாங்கிய பேட்ரியாட் 3 வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகளை மேம்படுத்த தைவான் வைத்த கோரிக்கைக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி காலாவதியாகும் பாகங்களை மாற்ற புதிய பாகங்கள், ஏவுதல் மற்றும் கட்டுபாட்டு அமைப்புகளுக்கு உதிரி பாகங்கள் உள்ளிட்ட சாதனங்களை லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தைவானுக்கு விற்க உள்ளது.

இந்த புதுப்பித்தல் பணிக்கான ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 620மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ஏற்கனவே அமெரிக்க அரசு சுமார் 180மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 18 கனரக மார்க்38 மாட்6 நீரடிகணைகளை விற்க ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.