சீனாவும் பாகிஸ்தானும் அஜோய் மிஸ்த்ரி எனும் இந்திய பொறியாளரை பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் 1267 தடைகள் கமிட்டி மூலமாக தடை விதிக்க முயன்றன.
இதற்கு அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தகுந்த ஆதாரங்கள் இல்லை எனக்கூறி ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நிலுவையில் வைத்திருந்தனர்.
ஆனால் ஆதாரங்களை சமர்பிக்காமல் சத்தமில்லாமல் குற்றச்சாட்டுகளை இருநாடுகளும் வாபஸ் பெற்றுள்ளன இந்த நிலையில் பாகிஸ்தான் பொய் குற்றச்சாட்டு முன்வைத்ததா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வருடமும் இதை போலவே வேணுமாதவ் டோங்காரா, கோபிந்தா பட்நாயக் மற்றும் அங்காரா அப்பாஜி ஆகிய இந்திய பொறியாளர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் சுமத்தி முக்குடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அணைவருமே ஆஃப்கானிஸ்தானில் பணிபுரியும் இந்திய பொறியாளர்கள் என்பது கூடுதல் தகவல்.