சீனாவின் தண்ணீர் போர்; எதிர்த்து களம் இறங்கும் அமெரிக்கா !!

மீகாங் நதி சீனா வழியாக மியான்மர், லாவோஸ், தாய்லாந்து கம்போடியா மற்றும் வியட்நாம் வழியாக சென்று கடலில் கலக்கும் ஒரு நதியாகும்.

இந்த நதி திபெத்தில் உருவாகி பாய்கிறது, ஆகவே சீனா மிகவும் சாதகமான நிலையில் உள்ளது அதாவது இந்த நதியின் நீராதாரத்தை தனது வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த நதிக்கு குறுக்கே 11 அணைகளை கட்டி சுமார் 47 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான நீரை சேகரித்து வைத்துள்ளது.

இதனால் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த நதியில் நீர்வரத்து குறைந்துள்ளது. நதியின் கடைப்பகுதிகளில் உள்ள நாடுகளான லாவோஸ் கம்போடியா வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள மீகாங் நதி பகுதிகளில் மணல் திட்டுகள் வெளி வந்துள்ளன.

சீனாவின் இந்த நடவடிக்கையால் சுமார் 7 கோடி மக்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் நேரடியாக பாதிக்கபடுகின்றனர்.

மேலும் இந்நதியால் விவசாயம், மீன்பிடி, நீராதாரம் என நேரடியாக பயன்பெறும் 1.2 கோடி வீடுகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இதனையடுத்து அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து உள்ளது, சீனாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளில் மீகாங் நதியும் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.