டிக் டாக் செயலி பாதுகாப்பற்றது, தனது பணியாளர்களிடம் அகற்ற உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் !!

அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களிடம் அவர்களுடைய மொபைல்களில் இருந்து டிக் டாக் செயலியை அகற்ற கோரி மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கை அனுப்பி உள்ளது.

டிக் டாக் செயலி பாதுகாப்பற்றது என்பதால் அமேசான் மின்னஞ்சலை உபயோகிக்கும் மொபைல்களில் அந்த செயலியை நீக்க வேண்டும் என அமேசான் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க ராணுவமும் தனது அதிகாரிகள் மற்றும் வீரர்கள் டிக் டாக் செயலியை தங்களது மொபைல் மற்றும் லாப் டாப்களில் இருந்து அகற்ற அறிவிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.