
கடந்த வாரம் வடக்கு ஆஃப்பரிக்க நாடான அல்ஜீரியாவின் அல்ஜீரிய தேசிய கடற்படை புதிய போர்க்கப்பல் வாங்க சீனாவை நாடியுள்ளது.
சீன கடற்படை பயன்படுத்தி வரும் டைப்056 ரக கார்வெட்டை அடிப்படையாக கொண்ட ஒரு கப்பலை வாங்க அந்த நாடு முடிவு செய்துள்ளது ஆனால் எத்தனை கப்பல்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்காக சீனாவின் ஹூடாங் – ஸாங்குவா கப்பல் கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் ரோந்து, கடல் பாதுகாப்பு மற்றும் கப்பல்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாக அல்ஜீரியா சீனாவிடம் இருந்து பிரங்கிகள், ட்ரோன்கள், மோர்ட்டார்கள் என பல ஆயுத அமைப்புகளை வாங்கி உள்ளது.