ஆக்ரோசமான ரோந்து பணிகளில் இந்திய கடற்படை; மிரண்டு ஓடும் சீனக் கப்பல்கள்

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on ஆக்ரோசமான ரோந்து பணிகளில் இந்திய கடற்படை; மிரண்டு ஓடும் சீனக் கப்பல்கள்

லடாக் எல்லையில் இந்திய இராணுவம் மற்றும் விமானப்படைகள் முழு தயார் நிலையில் இருக்கும் பட்சத்தில் இந்திய கடற்படை மேற்கு மற்றும் கிழக்கு இந்தியா கடற்பகுதியில் ஆக்ரோச ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

வங்காள விரிகுடாவிலோ அல்லது அராபிக் கடலிலாே சீன போர்க்கப்பல்களால் எந்தவித ஆபத்தும் நேரக்கூடாது என்பதில் குறியுடன் உள்ளது இந்திய கடற்படை.மலாக்கா நீரிணை முதல் ஹார்ன் ஆப் ஆப்ரிக்கா வரை ஜீன் 15 கல்வான் தாக்குதலுக்கு பிறகு மிக ஆக்ரோச ரோந்து பணியில் கடற்படை ரோந்து செய்து வருகிறது.

கடற்கொள்ளையர்கள் எதிர்ப்பு ஆபரேசன் என்ற பெயரில் சீன போர்க்கப்பல்கள் குவாதர் துறைமுகம் முதல் டிஜிபௌட்டி தளம் வரை என அலைந்து திரிந்து வருகின்றன.மலாக்கா நீரிணை வழியாக இந்திய பெருங்கடல் பகுதிக்கு வரும் சீனப் போர்க்கப்பல்கள் சர்வதேச கடற்பகுதியில் அலைந்து வருகின்றன.

இந்திய கடற்படை கோபத்துடன் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதை அறிந்த சீனகடற்படை கப்பல் பின்வாங்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏடன் வளைகுடாவில் திரிந்த மூன்று சீனக்கப்பல்கள் தங்களது பாதுகாப்பிற்காக டிஜிபௌட்டி நோக்கி திரும்பிவிட்டன.மேலும் மூன்று சீனக்கப்பல்கள் மலாக்கா நீரிணை வழியாக வெளியேறிவிட்டன.இந்தோனேசியா வழியாக இந்திய பெருங்கடல் வந்த சீனக் கப்பலும் தற்போது திரும்பி சென்றுவிட்டதாக சீனியர் கமாண்டர் தெரிவித்துள்ளார்.

இந்திய போர்க்கப்பல்களின் நடமாட்டத்தையும் அமெரிக்க,பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கடற்படைகளின் நடமாட்டத்தை ஒடுக்கி ஆதிக்கத்தை கொண்டு வர மியான்மர்,பாகிஸ்தான்,இலங்கை,ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் துறைமுக தளங்களை சீனா கொண்டுள்ளது.இந்த தளங்களுக்கு அதிகமாக போர்க்கப்பல்களை அனுப்பவதன் மூலம்இந்திய பெருங்கடலில் ஆதிக்கத்தை செலுத்தலாம் என்பது சீனாவின் எண்ணமாக உள்ளது.

தற்போது இந்திய கடற்படை முழு தயார் நிலையில் உள்ளது.அமைதியோ போரோ திணிக்கப்பட்டால் வரவேற்கிறோம்..