ஆக்கிரமிப்பு காலங்கள் எல்லாம் முடிந்தது-பிரதமரின் லடாக் விசிட் நமக்கு கூறுவதென்ன ?

  • Tamil Defense
  • July 4, 2020
  • Comments Off on ஆக்கிரமிப்பு காலங்கள் எல்லாம் முடிந்தது-பிரதமரின் லடாக் விசிட் நமக்கு கூறுவதென்ன ?

லடாக்கில் உள்ள இந்திய வீரர்களை சந்திந்து பேசியுள்ளார் பிரதமர் மோடி.எல்லையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முற்றி வரும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆக்கிரமிப்பு காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன.உலக நாடுகள் எல்லாம் இதற்கு எதிராக உள்ளன மற்றும் இது மேம்பாடு மற்றும் திறந்த போட்டிக்கான காலம் என பிரதமர் பேசியுள்ளார்.

லடாக்கின் நிமு பகுதியில் உள்ள நிலையில் உள்ள வீரர்களை வெள்ளியன்று காலை பிரதமர் சந்தித்துள்ளார்.20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு இந்த பயணம் அமைந்துள்ளது.

இதற்கு முன்பும் உலகில் ஆக்கிரமிப்பு பல நாடுகளால் நடத்தப்பட்டு உலக அமைதி குழைக்கப்பட்டது.ஆனால் இறுதியில் அந்த நாடுகள் வீழ்த்தப்பட்டுள்ளன என பிரதமர் சீனாவை மறைமுகமாக சுட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா தனது எல்லையை பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது எனவும் தெரிவித்துள்ளார்.வலிமையுடன் இருந்தால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும்.ஒரு வலிமை குன்றிய நாட்டால் அமைதியை நிலைநாட்ட முடியாது.குழல் ஊதும் கிருண்ரை வணக்கும் அதே இந்தியா தான் சுதர்சன் சக்ரம் கொண்டுள்ள கிருஷ்ணரையும் வணங்குகிறது என பிரதமர் பேசியுள்ளார்.

வீரத்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும்.முன்பை விட மூன்று மடங்கு அதிகமாக எல்லை கட்டமைப்பிற்கு செலவு செய்யப்படுகிறது என பேசியுள்ளார்.

கல்வான் தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய பிறகு பேசிய அவர் பாதுகாப்பு என்று வரும் போது நான் இரு தாய்களை யோசித்து பார்க்கிறேன்.ஒன்று இந்திய தாய் மற்றும் உங்கள் போல வீரமகன்களை பெற்றெடுத்த தாய் என பேசியுள்ளார்.