ஆஃப்கானிஸ்தானில் 6000-6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் ரிப்போர்ட் !!

  • Tamil Defense
  • July 25, 2020
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் 6000-6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் ரிப்போர்ட் !!

ஐக்கிய நாடுகள் சபையின் பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது.

இதில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் ஜமாத் உல் அஹ்ரார் மற்றும் லஷ்கர் இ இஸ்லாம் ஆகிய இயக்கங்களின் உதவியுடன் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்திய தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.

மேலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் ஐ எஸ் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக ஏறத்தாழ 2,200 பேர் ஆஃப்கானிஸ்தானில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இயக்கத்தின் தலைவனாக மத்தியுல்லாஹ் கமாஹ்வால் செயல்பட்டு வருகிறான், இவனுடன் சிரியாவை சேர்ந்த அபு சயத் மொஹம்மது அல் கொரஸானி மற்றும் ஷேய்க் அப்துல் தாஹீர் ஆகியோர் இந்த அமைப்பை நிர்வகித்து வருகின்றனர், இவர்கள் மூவருக்கும் உதவியாக அபு குதாய்பா மற்றும் அபு ஹர்ஜார் அல் ஈராக்கி ஆகிய மூத்த ஐ.எஸ் தளபதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆஃப்கானிஸ்தானில் அல் காய்தா இயக்கம் தாலிபான்கள் உதவியுடன் 12 மாகாணங்களில் இயங்கி வருவதாகவும்,
ஏறத்தாழ 600 உறுப்பினர்கள் வரை இந்த அமைப்பில் உள்ளதாகவும்,

இந்த இயக்கத்தின் தலைவன் அய்மன் அல் ஸவாஹிரி ஆஃப்கானிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.