இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 60 பயங்கரவாதிகள்

இந்திய இராணுவத்தின் மொத்த கவனமும் லடாக்கில் குவிந்திருக்கும் நிலையில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 50-60 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர்களில் பெரும்பான்மையானோர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அஷ்பக் பர்வால் என்ற பயங்கரவாதியின் தலைமையில் ஆறு பயங்கரவாதிகள் நௌசேரா பகுதியிலும் ,பிம்பர் காலி பகுதியில் ஐந்து பயங்கரவாதிகளும் ஊடுருவ தயாராக இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளன.

இது போல எல்லையின் பல்வேறு பகுதியில் பயங்கரவாதிகள் சிறிய குழுக்களாக ஊடுருவ தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே போல ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள் நௌகம் பகுதியில் ஆக்டிவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களை எதிர்கொள்ள நமது இராணுவம் தயார் நிலையில் உள்ளது.