39 பயங்கரவாதிகளை சரணடைய வைத்த இந்திய அமைதிப்படை வீரர்கள்

  • Tamil Defense
  • July 22, 2020
  • Comments Off on 39 பயங்கரவாதிகளை சரணடைய வைத்த இந்திய அமைதிப்படை வீரர்கள்

டிஆர் காங்கோ நாட்டில் ஐநா அமைதி படை சார்பாக இந்திய வீரர்கள் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்திய இராணுவத்தின் முயற்சியால் அங்கு ஆயுதம் ஏந்தும் குழுவைச் சேர்ந்த 39 பேர் சரணடைந்துள்ளனர்.

டிஆர் காங்கோவின் நார்த் கிவு பகுதியில் உள்ள ஆயுதம் ஏந்திய குழு தான் மாய் மாய் கிடெடே.இந்திய அமைதிப்படை வீரர்களின் பெருமுயற்சியால் இந்த இயக்கத்தின் இரண்டாவது கமாண்ட் உட்பட 39 பேர் சரணடைந்துள்ளனர்.இது அங்கு ஆகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஐநா அமைதிப்படைக்கு அதிக அளவு வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இந்தியா உள்ளது.அப்யே,சைப்ரஸ்,டிஆர்சி,லெபனான்,மத்திய கிழக்கு,சூடான்,தெற்கு சூடான் மற்றும் மேலும் பல இடங்களில் அமைதிகாக்கும் பணிகளில் இந்திய இராணுவம் ஈடுபட்டு வருகிறது.