Day: July 31, 2020

பாதுகாப்பு தேவைக்கும் அதிகமாக ஆயுதங்கள் வாங்கும் இந்தியா-கலக்கத்தில் பாகிஸ்தான்

July 31, 2020

இந்தியா தனது பாதுகாப்பு தேவைக்கும் அதிகமாக தளவாடங்களை வாங்கி குவித்து வருவதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு ஆசியப் பகுதியில் சமநிலைத் தன்மையை குலைக்கும் வகையில் இந்தியா செயல்படுவதாகவும் சர்வதேச நாடுகள் இதை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ரபேல் இந்தியாவிற்கு வந்த பிறகு பாக்கின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.ரபேல் படையில் இணைந்த பிறகு இந்திய விமானப்படையின் திறன் அதிகரித்துள்ளது. ரபேல் அனைத்துவிதமாக ஆபரேசன்களையும் செய்யக்கூடியது.சுகாய் விமானத்திற்கு பிறகு பலவருட தேடல் மற்றும் […]

Read More

உள்நாட்டில் தயாரிக்கப்படக்கூடிய ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தடை ?

July 31, 2020

இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிப்பது குறித்து மத்திய இராணுவ அமைச்சகம் பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது. இறக்குமதிக்கு தடை செய்யப்பட உள்ள ஆயுதங்களின் லிஸ்ட் நேரத்திற்கு நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தற்போது ரோந்து கப்பல்கள்,வானூர்திகள்,சோனார்கள்,ரேடார்கள்,ஏவியோனிக்ஸ், ரேடார் எச்சரிக்கை அமைப்புகள்,சிறிய ரக ஆயுதங்கள்,கடலோர பாதுகாப்பு அமைப்புகள்,உடற்கவசம் ஆகியவற்றை ஏற்றுமதியும் செய்து வருகிறது.

Read More

திபெத் மற்றும் தென்சீன கடல் பகுதியில் சீனா போர் பயிற்சி !!

July 31, 2020

திபெத் பகுதியில் சீன ராணுவம் நீண்ட தூர துல்லிய தாக்குதல் பயிற்சிகளை நடத்தி உள்ளது, இந்த பயிற்சியில் அதிநவீன பிரங்கிகள் பயன்படுத்த பட்டுள்ளன. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வழக்கமான வருடாந்திர அடிப்படையிலான பயிற்சி எனவும், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தவிர சீன கடற்படை தனது ஹெச் 6ஜி மற்றும் ஹெச் 6ஜே ஆகிய குண்டுவீச்சு விமானங்களை கொண்டு போர் பயிற்சி மேற்கொண்டது. இதில் இரவு நேர இயக்கம், […]

Read More

சீன எல்லை தகராறில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிப்பு !!

July 31, 2020

சீனாவுடனான எல்லை தகராறில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன. சமீபத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை சந்தித்தார். இது குறித்து பேசிய அவர் எல்லை கட்டுபாட்டு பகுதியில் சீனா ஒருதலைபட்சமான வகையில் செயல்படுவதை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஒப்பு கொள்ளாது எனவும், படைகளை விலக்கி கொண்டு சுமுகமான முறையில் பிரச்சினையை முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

Read More

ரஃபேல் விமானங்களை பெற்றமைக்கு இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர் !!

July 31, 2020

கடந்த வியாழக்கிழமை அன்று இந்திய விமானப்படை முதல் 5 ரஃபேல் போர் விமானங்களை பெற்று கொண்டது. இதனையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த பதிவில் “ரஃபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், தேசத்தை அயராது பாதுகாக்கும் முப்படையினருக்கு இது புது உத்வேகத்தை அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படையில் க்ருப் கேப்டனாக (கவுரவ பதவி) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய கடற்படையின் எதிர்கால சூப்பர் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளுக்கு அதிநவீன கடற்படை ஸ்கல்ப் ஏவுகணைகள் !!

July 31, 2020

இந்திய கடற்படை ப்ராஜெக்ட்75ஐ திட்டத்தின் கீழ் 6 புதிய அடுத்த தலைமுறை நீர்மூழ்கிகளை பெற விரும்புகிறது. இதற்கு ஸ்கார்பீன் நீர்மூழ்கியின் மேம்படுத்த பட்ட வடிவமான சூப்பர் ஸ்கார்பீன் இப்போட்டியில் உள்ளது. தற்போது இந்த நீர்மூழ்கிகளுடன் அதிநவீன ஸ்கல்ப் ஏவுகணைகளையும் தர ஃப்ரான்ஸ் முன்வந்துள்ளது. இந்த ஏவுகணை ஏற்கனவே ரஃபேல் விமானத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது, ஆனால் இது கடற்படை ரகமாகும், கடற்படை க்ருஸ் ஏவுகணை வகையை சாரந்தது. ஏற்கனவே ரஷ்யா தனது அமூர் ரக நீர்மூழ்கிகளுடன் காலிபர் மற்றும் […]

Read More

மேலதிக ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவது உறுதி !!

July 31, 2020

இந்திய விமானப்படைக்கு மேலதிகமாக 36 அல்லது சுமார் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தனை ரஃபேல் விமானங்கள் வாங்கப்படும் என தெரியவில்லை ஆனால் நிச்சயமாக கூடுதல் போர் விமானங்கள் வாங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலையில் இந்தியா இரண்டு ஸ்க்வாட்ரன்களுக்கான (36 விமானங்கள்) ரஃபேல் போர் விமானங்களை வாங்கி உள்ளது. முதல் ஸ்க்வாட்ரன் ஹரியானா மாநிலம் அம்பாலாவிலும், இரண்டாவது ஸ்க்வாட்ரன் மேற்கு வங்க மாநிலம் ஹஸிமாரா தளத்தில் […]

Read More

கிழக்கு லடாக் பகுதியில் இருந்து வெளியேறாத சீனா-இந்தியா குற்றச்சாட்டு

July 31, 2020

இருநாடுகளும் படைகளை விலக்கிகொண்டுள்ளதாக சீனா செய்தி வெளியிட்ட இரு நாட்களுக்கு பிறகு இந்தியா சீனாவின் கருத்தை மறுத்துள்ளது. ஏற்கனவே சீனா களநிலை குறித்து பேசியிருந்தது.களநிலை சரியாகி வருவதாக கூறியிருந்தது.சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும் பின்வாங்குவதல் இன்னும் முழுமையடையவில்லை என இந்தியா மறுத்துள்ளது. இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் விரைவில் அடுத்த கட்ட கள சந்திப்பு நிகழ்த்த உள்ளனர்.அப்போது முழுமையான படைவிலக்கம் குறித்து விவாதிக்கப்படும் என வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஸ்ரீவத்சவா அவர்கள் கூறியுள்ளார்.

Read More

குண்டுவீசும் விமானங்களை தென்சீனக் கடல்பகுதிக்கு அனுப்பும் சீனா-பதற்றம் அதிகரிப்பு

July 31, 2020

சீனா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தென்சீனக்கடல் பகுதிக்கு நெடுந்தூரம் செல்லும் குண்டுவீசும் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் ஏற்கனவே சீனக்கடற்படை போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் தொலைதூர குண்டுவீசும் விமானங்களையும் சீனா அனுப்பியுள்ளது. சீன இராணுவ செய்தி தொடர்பாளர் ரென் குவோகியாங் இதுகுறித்து கூறுகையில் இரவு நேரத்தில் தரையிறங்கவும் மேலே பறக்கவும் பயிற்சிகள் நடப்பதாக கூறியுள்ளார்.மேலும் நெடுந்தூர இலக்கை தாக்கியழித்தல் போன்ற பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவீன் நெடுந்தூர […]

Read More

இந்தியா அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பானிலும் டிக் டாக் தடை ??

July 31, 2020

சில ஜப்பானிய சட்ட நிபுணர்கள் ஜப்பானில் டிக் டாக் உள்ளிட்ட சில சீன செயலிகளை தடை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான NHK செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் தகவல் திருட்டு மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக டிக் டாக் செயலிக்கு தடை விதித்தன, இதே கவலையை தெரிவித்துள்ள ஜப்பானிய சட்ட நிபுணர்கள் செப்டம்பர் மாதம் வாக்கில் அரசுக்கு கோரிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளனர். டிக் டாக் செயலி முதலில் வெற்றிகரமாக […]

Read More