இந்திய தரைப்படையின் 19ஆவது காலாட்படை டிவிஷனுடைய தலைமை கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விரேந்திர வாட்ஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில் “எல்லையோரம் உள்ள பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் இன்று காலை நவ்காம் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் கடும் தாக்குதலை நமது வீரர்கள் மீது நடத்தினர், இந்த உதவியோடு இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்ஆனால் அவர்களை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
அவர்களிடமிருந்து இரண்டு ஏகே47 ரக துப்பாக்கிகளும் அவற்றிற்கான 12 முழு மேகஸின்களும், பிஸ்டல்கள் மற்றும் சில மேகஸின்களும், பின்னர் 1.5 லட்சம் ருபாய் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.