Day: July 30, 2020

தென்சீன கடல் பகுதியில் குவியும் அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள் !!

July 30, 2020

தென்சீன கடல்பகுதியில் அமெரிக்க தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த விமானங்கள் சீன கடற்படை மற்றும் இதர படைகளின் நடவடிக்கைகளை குறிப்பாக நீர்மூழ்கிகளின் கண்காணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தைவானுக்கு எதிராக சீனா தனது முரட்டுத்தனமான செயல்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்க்ஐ தைவானுக்கு ஆதரவானதாக பார்க்கப்படுகிறது.

Read More

நீர்மூழ்கி தொழில்நுட்ப தகவல்களை திருடியதாக ரஷ்யா சீனா மீது குற்றச்சாட்டு !!

July 30, 2020

சில நாட்களுக்கு முன்னர் முக்கிய ரஷ்ய விஞ்ஞானியான வலேரி மிட்கோ சீனாவுக்கு வேவு பார்த்ததன் அடிப்படையில் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை பதிவிட்டு அறிந்தோம். தற்போது அவரிடம் ரஷ்ய அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் மிக மிக முக்கியமான தகவல்களை சீனாவுக்கு வழங்கியது தெரிய வந்துள்ளது. ரஷ்ய கடற்படையின் நீர்மூழ்கிகளின் தொழில்நுட்ப ரகசியங்களை அவர் சீனாவுக்கு கசிய விட்டுள்ளார். அவரை வீட்டு காவலில் வைத்து விசாரிக்க ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய மியான்மர் எல்லையில் கண்ணிவெடி தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம் !!

July 30, 2020

இந்திய மியான்மர் எல்லையோர பகுதியில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் பகுதி ஆதிக்க ரோந்து (ADP – AREA DOMINATION PATROL) முடித்து கொண்டு முகாமுக்கு திரும்பினர். அப்போது சான்டெல் அருகே அவர்கள் வாகன காண்வாய் வந்த போது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது, இதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இந்த தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். வீரமரணம் அடைந்த வீரர்கள் முறையே மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் […]

Read More

கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை சோதனை செய்ய உள்ள கடற்படை; மீன்பிடி கப்பல்களுக்கு எச்சரிக்கை

July 30, 2020

வரும் ஆகஸ்டு 7ம் தேதி கடற்படை பயிற்சி நோக்கமாக தனது கடலோர பாதுகாப்பு ஆயுதங்களை சோதனை செய்ய உள்ளது.இதற்காக மீன்பிடி கப்பல்கள் மற்றும் மற்ற கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 105mm இலகுரக பீல்டு பீரங்கி, 40/60 விமான எதிர்ப்பு பீரங்கி ஆகியவற்றை சோதனை செய்ய உள்ளது.மர்மகோவா பகுதியில் காலை 9 மணி முதல் 1 மணி வரை இந்த பயிற்சி நடக்க உள்ளது. இந்த நேரத்தில் அங்கு எந்தவித கப்பல்களும் வர தடைசெய்யப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

நாட்டின் ஒருங்கிணைப்பை சீர்குலைக்க முயன்றவர்கள் இனி கவலை கொள்வர்-பாதுகாப்பு துறை அமைச்சர்

July 30, 2020

ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள இந்த நேரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.நாட்டின் ஒருங்கிணைப்பு தன்மையை குலைக்க முயன்றவர்கள் இனி கவலை கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார். குறிப்பிட்டு அவர் எந்த நாட்டையும் பேசவில்லையெனினும் தற்போது நடக்கும் பிரச்சனை மூலம் அது சீனாவுக்கு எதிராக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். சரியான நேரத்தில் விமானப்படைக்கு இந்த ரபேல் விமானங்கள் பலத்தை அளித்துள்ளன எனவும் அவர் பேசியுள்ளார்.இந்த விமானங்கள் விமானப்படையின் செயல்படு திறனில் புரட்சியை ஏற்படுத்தும் […]

Read More