40 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர்;129 பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

  • Tamil Defense
  • July 13, 2020
  • Comments Off on 40 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர்;129 பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

வடக்கு காஷ்மீர் பகுதியில் 30 முதல் 40 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர் என வடக்கு காஷ்மீர் டிஐஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.பாக் பயங்கரவாத ஏவு முகாம்களில் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

30 முதல் 40 பயங்கரவாதிகளே வடக்கு காஷ்மீர் மாவட்டங்களில் எஞ்சியுள்ளனர் எனவும் அதில் 16 முதல் 17 பயங்கரவாதிகள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.

இன்று இருவேறு என்கெளன்டர்களில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த வருடத்தில் 129 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் என்றும் 100 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.