Day: July 25, 2020

நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது

July 25, 2020

அமெரிக்காவிடம் இருந்து மேலதிக ஆறு பொசைடான் விமானங்கள் வாங்கும் நடைமுறையை இந்தியா தொடங்கியுள்ளது.இது தவிர ஆறு பிரிடேடர் பி ட்ரோன்கள் வாங்கும் நடைமுறையும் துரிதப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பொசைடான் விமானங்கள் லடாக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சிறந்த எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்கள் மற்றும் ராடார்களுடன் கண்காணிப்பு பணிகளில் ஆகச் சிறந்து விளங்குகின்றன இந்த பொசைடான் விமானங்கள். ஹார்பூன் பிளாக்-2 ஏவுகணைகள் மற்றும் MK-54 இலகுரக டோர்பிடோக்கள் கொண்டு எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது. ஜனவரி 2009ல் மேற்கொண்ட […]

Read More

மத்திய காஷ்மீரில் என்கௌன்டர் தொடங்கியது

July 25, 2020

காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே என்கௌன்டர் தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பயங்கரவாதிகளுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு தற்போது இந்த பகுதிகளை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.

Read More

செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவியதாக இரஷ்யா மீது குற்றச்சாட்டு

July 25, 2020

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இரஷ்யா செயற்கைகோள் ஏவுகணை ஏவியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன.இந்த குற்றச்சாட்டை இரஷ்யா மறுத்துள்ளது.இரஷ்யா ஒரு செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை ஏவியதாக அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் குற்றச்சாட்டு எழுப்பியது. குற்றச்சாட்டை இரஷ்யா மறுத்தாலும் தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. 2018ல் கூட இதே போல ஒரு குற்றச்சாட்டை இரஷ்யா மீது முன்வைத்தது அமெரிக்கா. இது போன்ற சோதனைகளை இரஷ்யா முன்னெடுப்பதை எதிர்காலத்தில் குறைக்க வேண்டும் என இங்கிலாந்து கூறியுள்ளது.

Read More