சட்டீஸ்கரில் 25 முக்கிய மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர் அதிரடி நடவடிக்கைகளுக்கு பலன் !!

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on சட்டீஸ்கரில் 25 முக்கிய மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர் அதிரடி நடவடிக்கைகளுக்கு பலன் !!

மாவோயிஸ்டுகளை ஒழிக்க மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

அவர்களை ஒடுக்குவதானாலும் சரி, சரணடைபவர்களுக்கு புதிய வாழ்க்கை அமைத்து கொடுப்பதானாலும் சரி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தின் பஸ்தார் பகுதியில் 25 முக்கிய மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர், அவர்களில் மூவரது தலைக்கு தலா 1 லட்சம் ருபாய் வீதம் பரிசுத்தொகை உள்ளது.

சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசு நடைமுறைகளின்படி மறுவாழ்வு உறுதி செய்யப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறினார்.