Breaking News

Day: July 25, 2020

20 லட்சம் உய்குர் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள சீன அரசு: ஐரோப்பிய ஒன்றியம்

July 25, 2020

20 லட்சம் உய்குர் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள சீன அரசு: ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் விசாரணை ஆணையம் அமைக்க ஐநா சபைக்கு கோரிக்கை விடுக்க ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் !! ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையிடம் உய்குர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்குமாறு வலியுறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய […]

Read More

எல்லைப் பிரச்சனை வேளையில் மேற்கு வான் கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம்

July 25, 2020

ஏர்மார்சல் விவேக் ராம் சௌதாரி மேற்கு விமானப்படை கட்டளையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.லடாக் எல்லையில் சீனாவுடனான பிரச்சனை நீடித்து வரும் வேளையில் இந்த புதிய மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது அவர் கிழக்கு கட்டளையகத்தின் சீனியர் ஏர் ஸ்டாஃப் அதிகாரியாக உள்ளார்.வரும் ஆகஸ்டு 1 அன்று பதவியேற்க உள்ளார். நேற்று தான் விமானப்படை கமாண்டர்களின் சந்திப்பும் முடிவுற்றது.விமானப்படையின் எதிர்காலம் குறித்து இந்த சந்திப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. எல்லையில் ரோந்து பணிகளையும் விமானப்படை அதிகப்படுத்தியுள்ளது.சுகாய்,மிராஜ்,ஜாகுவார் மற்றும் மிக்-29 […]

Read More

வேகமாக பலத்தை அதிகரிக்கும், இந்திய விமானப்படை தளபதி பேட்டி !!

July 25, 2020

கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பிரச்சினை நடைபெற்று வரும் நேரத்தில் பலத்தை அதிகரிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். தலைநகர் தில்லியில் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்று வந்த தளபதிகள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவு நாளன்று பேசினார். அப்போது இந்திய விமானப்படையின் பலத்தை மிகவும் வேகமாக அதிகரிப்பது அவசியம் என விமானப்படை தளபதிகளிடம் வலியுறுத்தினார். நிறைவு நாளன்று இந்திய கூட்டுபடைகள் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் […]

Read More

காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவம் அதிரடி, ஜெய்ஷ் இயக்கத்தின் பதுங்குமிடம் அழிப்பு !!

July 25, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் பதுங்குமிடம் அழிக்கப்பட்டு உள்ளது. கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்திய தரைப்படையின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ், மத்திய ரிசர்வ் காவல்படை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி படையினர் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். ட்ரால் மாவட்டம் சின்ஃபாடி மச்சாமாவில் உள்ள காடுகளில் தீவிர தேடுதல் வேட்டையின் போது ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சரிவு பகுதியில் […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் 6000-6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் ரிப்போர்ட் !!

July 25, 2020

ஐக்கிய நாடுகள் சபையின் பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது. இதில் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் ஜமாத் உல் அஹ்ரார் மற்றும் லஷ்கர் இ இஸ்லாம் ஆகிய இயக்கங்களின் உதவியுடன் பல்வேறு தாக்குதல்களை நிகழ்த்திய தெஹ்ரீக் இ தாலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். மேலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் ஐ […]

Read More

தென்சீன கடல்பகுதியில் அமெரிக்காவின் பி52 தொலைதூர குண்டுவீச்சு விமானம் !!

July 25, 2020

அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். ரோனால்ட் ரேகன் ஆகிய விமானந்தாங்கி கப்பல்கள் தங்களது தாக்குதல் படையணிகளுடன் தென்சீன கடல்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க விமானப்படையின் 96ஆவது குண்டுவீச்சு படையணியின் பி52 தொலைதூர குண்டுவீச்சு விமானம் தென்சீன கடல்பகுதிக்கு சென்றுள்ளது. லூய்ஸியானா மாகாணத்தில் உள்ள பார்க்ஸ்டேல் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சுமார் 28 மணிநேரம் பயணித்து தென்சீன கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அமெரிக்க விமானந்தாங்கி […]

Read More

கேரளா, கர்நாடகாவில் ஏறத்தாழ 200 ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி ரிப்போர்ட் !!

July 25, 2020

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான “பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு” சமீபத்தில் தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதில் இந்திய துணை கண்டத்தில் அல்காய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த அமைப்புக்கு இந்தியா பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் சுமார் 200 உறுப்பினர்கள் வரை உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது. மேலும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தியாவை தனது புதிய மாகாணமாக அறிவித்து “விலாயா ஹிந்த்” என அதற்கு பெயர் […]

Read More

சாபஹாரில் என்ன செய்ய வேண்டுமென அமெரிக்கா எங்களுக்கு கற்பிக்க முடியாது : இந்தியா !!

July 25, 2020

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பேசிய ஈரானுக்கான இந்திய தூதர் கத்தாம் தர்மேந்திரா ” ஈரானுடன் அவர்கள் நாட்டு பணமான ரியாலில் வர்த்தகம் செய்யும் ஒரே நாடு இந்தியா எனவும், இது சாரந்த பண பரிமாற்றத்திற்காகவே இந்தியா தரப்பில் யூகோ வங்கி மற்றும் ஈரான் தரப்பில் ஆறு வங்கிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஈரானிய மத்திய வங்கி ஆகியவை தான் தேர்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பேசுகையில் நாங்கள் சாபஹாரை மேம்படுத்துகிறோம், கருவிகளை […]

Read More

இரு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

July 25, 2020

காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுற்றி வளைத்தனர். என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

மத்திய காஷ்மீரில் என்கௌன்டர்; ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்

July 25, 2020

காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே என்கௌன்டர் தொடங்கியுள்ளது.இந்த சண்டையில் தற்போது ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுற்றி வளைத்தனர். என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More