248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க அனுமதி-இனி 100கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கலாம்

  • Tamil Defense
  • July 3, 2020
  • Comments Off on 248 அஸ்திரா ஏவுகணைகள் வாங்க அனுமதி-இனி 100கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கலாம்

கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்கிர அழிக்கும் இந்தியத்தயாரிப்பு வான்-வான் ஏவுகணை தான் அஸ்திரா ஆகும்.

தற்போது மேம்பாடு தொடர்பான அனைத்து சோதனைகளையும் தாண்டி முதல் முறையாக 248 அஸ்திரா ஏவுகணைகள் பெற அனுமதி வழங்கியுள்ளது இராணுவ தளவாட கொள்முதல் அமைப்பு.

இவற்றுள் 48 ஏவுகணைகள் கடற்படைக்கு வழங்கப்பட உள்ளது.அவை மிக்-29 விமானங்களில் இணைக்கப்பட உள்ளது.தவிர 200 ஏவுகணைகள் விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளது.

அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற இந்த அஸ்திரா ஏவுகணையை நமது டிஆர்டிஓ மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.