Breaking News

Day: July 24, 2020

செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

July 24, 2020

ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட தற்போது சீனா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா-சீனா உறவு எப்போதும் இல்லாத அளவு தற்போது மோசமடைந்துள்ளது. ஹூஸ்டன் தூதரகத்தை மூடும் உத்தரவை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் எனவும் இது பழைய உறவை தொடர வழிவகுக்கும் என சீனா கூறியுள்ளது.

Read More

ஃபிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து; 2 பேர் பலி !!

July 24, 2020

ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கயுயான் நகரில் உள்ள தளத்தில் விபத்துக்கு உள்ளானது. இரவு நேர பறக்கும் திறன்களை சோதிக்க ஹெலிகாப்டர் புறப்பட்ட போது எதிர்பாராத வகையில் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டர் ஃபிலிப்பைன்ஸ் விமானப்படையின் 205ஆவது படையணிக்கு சொந்தமான பெல் ஹூவே ஹெலிகாப்டர் ஆகும். தூரதிர்ஷ்வசமாக இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ஐவரில் இருவர் மரணத்தை தழுவி உள்ளனர்.

Read More

இந்தியா ரஷ்யா இடையே விரைவில் கையெழுத்தாக உள்ள மிக முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் !!

July 24, 2020

இந்தியாவும் ரஷ்யாவும் விரைவில் ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளன. தற்போது இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு ரஷ்ய அதிபர் இந்தியா வரும் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இதன்படி இந்தியா கடற்படையின் கப்பல்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் ரஷ்ய தளங்களை பயன்படுத்தி கொள்ள முடியும், அதேபோல் அவர்களும் நமது தளங்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கனவே […]

Read More

புதிய துப்பாக்கிகளை பெறும் ஆஸ்திரேலிய ராணுவம் !!

July 24, 2020

ஆஸ்திரேலிய ராணுவம் மிக நீண்ட காலமாக ஆக் ஸ்டெய்ர் AUG STEYR ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது. பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு 70மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் புதிய துப்பாக்கிகளை வாங்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து சுமார் 30,000 EF88 அல்லது F90 தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க தேல்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 8,500 EF88 அல்லது F90 ரக துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுடன் சுமார் 2500 […]

Read More

இந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு !!

July 24, 2020

சீன ஊடக நிறுவனமான ஷின்ஹூவாவில் பணிபுரியும் மூன்று சீனர்களின் விசா காலத்தை நீட்டிப்பு செய்ய இந்திய அரசு மறுத்துள்ளது மேலும் அவர்களை திரும்பி செல்ல கேட்டு கொண்டுள்ளது. இந்த மூவரும் பல முறை விசா காலக்கெடு நீட்டிப்பு பெற்றுள்ளனர், இவர்களில் ஒருவர் சுமார் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த மாதம் பெங்களூர் சென்று திபெத்திய மக்களை சந்தித்து உள்ளனர், இதனை இந்திய அரசு விரும்பவில்லை. இவர்களை திரும்ப அனுப்பும் அதே […]

Read More

ஆஸ்திரியாவிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட போர் விமானங்களை வாங்க இந்தோனேசியா முடிவு !!

July 24, 2020

ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சர் க்ளாடியா டேன்னர் அவர்களுக்கு இதுகுறித்து இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ப்ரபவோ ஸூபியன்டோ கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் ஆஸ்திரிய விமானப்படை பயன்படுத்தி வரும் 15 யூரோஃபைட்டர் டைஃபூன் விமானங்களை இந்தோனேசிய விமானப்படையை நவீனப்படுத்தும் பொருட்டு வாங்க விரும்புகிறோம் என குறிப்பிட்டு உள்ளார். இந்த விமானங்களை ஆஸ்திரியா கடந்த 2002ஆம் ஆண்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது, இவை வான் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் ட்ரான்செ-1 ரகத்தை சேர்ந்தவை ஆகும்.

Read More