Day: July 22, 2020

இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ட்ரோன் தயாரிக்க பேச்சுவார்த்தை: பெண்டகன் அதிகாரி அறிவிப்பு !!

July 22, 2020

மூத்த பெண்டகன் அதிகாரி எல்லன் எம் லார்டு சமீபத்தில் பேசுகையில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ட்ரோன் தயாரிக்க முடிவு செய்துள்ளன. இதன்படி இந்த திட்டம் இந்திய விமானப்படை, அமெரிக்க விமானப்படை ஆய்வகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஒரு இந்திய நிறுவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் என கூறினார். இதன் மூலமாக இந்திய அமெரிக்க பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அதிகரித்துள்ளது தெரிகிறது.

Read More

இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையின்படி செயல்படும் என நம்புகிறோம் : அமைச்சர் ஜெய்ஷங்கர் பேச்சுக்கு எதிரொலி !!

July 22, 2020

சமீபத்தில் நமது வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இந்தியா தனது அணிசேரா கொள்கையை களைய வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது இந்தியா தொடர்ந்து சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றி பொறுப்புடன் செயல்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

Read More

எப்போதும் தயாராக இருங்கள் விமானப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை !!

July 22, 2020

புதன்கிழமை தொடங்கிய விமானப்படை தளபதிகளின் வருடாந்திர சந்திப்பு கூட்டத்தை தொடங்கி வைத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது இந்திய விமானப்படை லடாக் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், போக்குவரத்து விமானங்கள் மூலமாக படை வீரர்களை எல்லைக்கு விரைவாக நகர்த்தியதாகட்டும், போர் விமானங்களை அனுப்பி பாதுகாப்பை பலப்படுத்தியதாகட்டும் பாராட்டுக்கு உரிய செயல்பாடுகளாகும் என பாராட்டினார். பின்னர் இந்திய முப்படைகளும் எதற்கும் தயாராக வேண்டும் எனவும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக பதிலடி கொடுக்க தயாராக இருக்க […]

Read More

இந்தியாவின் அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானிடம் இருந்து சீனாவை நோக்கி திரும்புகிறது !!

July 22, 2020

புல்லடிட்டின் ஆஃப் அட்டாமிக் சயின்டிஸ்ட்ஸ் எனும் அமைப்பு சமீபத்தில் பிரசுரித்த ஆய்வு கட்டுரை ஒன்றில் இந்தியாவின் அணு ஆயுத கொள்கை பாகிஸ்தானிடம் இருந்து சீனாவை நோக்கி நகர்வதாக தெரிய வந்துள்ளது என புலனாகிறது. இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட ஹான்ஸ் எம் கிறிஸ்டென்ஸன் மற்றும் மேட் கோர்டா ஆகியோர் பேசுகையில் காலம் காலமாக பாகிஸ்தானை பிரதானபடுத்திய இந்திய அணு ஆயுத கொள்கை தற்போது சீனாவை நோக்கி நகர்வதாக தெரிவித்துள்ளனர், அதன் ஒரு பகுதி தான் பெய்ஜிங் வரை […]

Read More

லடாக்கில் இந்திய கடற்படையின் மிக்29 போர் விமானங்கள் !!

July 22, 2020

இந்திய கடற்படையின் மிக்29 கே போர் விமானங்கள் லடாக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாகவும், வடக்கு பிராந்தியத்தில் முக்கிய விமானப்படை தளங்களில் இந்த போர் விமானங்கள் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது. இந்திய கடற்படையின் போர் விமானங்கள் வடக்கு பிராந்திய பகுதியில் விரைவில் நிலைநிறுத்தப்படும் என ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய விமானப்படை 40மிக் 29 போர் விமானங்களை இயக்கி வருகிறது, அவற்றில் […]

Read More

லடாக்கில் இந்திய கடற்படையின் பி8ஐ கண்காணிப்பு விமானங்கள் !!

July 22, 2020

இந்திய கடற்படையின் பி8ஐ பொஸைடான் கண்காணிப்பு விமானங்கள் லடாக் பகுதிக்கு நகர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய சீனாவுடனான எல்லை பிரச்சினையில் இந்திய கடற்படையின் பி8ஐ கண்காணிப்பு விமானங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்த விமானங்கள் எல்லையோரம் சீன ராணுவ நடமாட்டங்கள் நகர்வுகளை கண்காணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் எல்லையோரம் இவை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. 2017ஆம் ஆண்டு டோக்லாமில் சீனாவுடன் ஏற்பட்ட எல்லை பிரச்சினையின் போதும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

சீனா பதிலடி; வுகானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனா பரிசீலனை

July 22, 2020

ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து வுகானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனா பரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா இந்த முடிவை கைவிட வேண்டும் என சீனா முதலில் வலியுறுத்தியது.அப்படி இல்லாத பட்சத்தில் பதிலடி தரப்படும் என காட்டமாக பதிலளித்திருந்தது சீனா. இது ஒருதலைபட்சமான முடிவு எனவும் சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் வாங் வென்பின் கூறியிருந்தார்.

Read More

சீனத் தூதரகத்தை மூடிவிட்டு கிளம்புங்கள்: அமெரிக்கா அதிர்ச்சி முடிவு

July 22, 2020

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீன உறவு அனைத்து வகையிலும் மோசமடைந்து வரும் நிலையில் ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இந்த ஒருவழி முடிவை கைவிடாவிட்டால் இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என சீனா இதற்கு பதிலடி கொடுத்துள்ளது.அமெரிக்கா சீன டிப்ளோமேட்டிக் அதிகாரிகளை தொந்தரவு செய்வதாகவும் காரணமில்லாமல் சீனர்களின் உடமைகளை சோதனையிடுவதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை உடனடியாக இந்த முடிவுக்கு கொண்டு சென்றது எது என தெரியவில்லை.மேற்கு நாடுகளின் 11 […]

Read More

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக அணிசேரா கொள்கையை விமர்சித்த முதல் வெளியுறவு அமைச்சர் !!

July 22, 2020

நமது நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் என்பது நம் அணைவருமே அறிந்த விஷயம் தான். இவர் ஒரு முன்னாள் வெளியுறவு துறை அதிகாரி, மிகவும் அனுபவம் வாய்ந்தவர், இவரது பல வருட பணிக்காலத்தில் இந்திய வெளியுறவு கொள்கையின் போக்கை மாற்றி திறம்பட கையாண்ட ஒருவர் என கூறலாம். கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி இருவரின் பாரபட்சம் அற்ற விருப்ப தேர்வாகவே இவர் இருந்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள […]

Read More

அதிர்ச்சி:ஜம்மு காஷ்மீரில் கைப்பற்றப்பட்ட பிகா இலகுரக இயந்திர துப்பாக்கி !!

July 22, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோவ்ரி மாவட்டத்தில் உள்ள தனாமந்தி பகுதியில் நடைபெற்ற சோதனையில் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. இது குறித்து ரஜோவ்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தன் கோலி கூறுகையில் புதன்கிழமை அன்று குறிப்பிட்ட பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது, இதனையடுத்து நாங்கள் அப்பகுதிக்கு விரைந்தோம். தனாமந்தி பகுதி முழுவதும் 38ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் அதிரடிப்படை வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் மிகப்பெரிய […]

Read More