கார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று

  • Tamil Defense
  • July 26, 2020
  • Comments Off on கார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று

இன்று நாட்டு மக்களால் 21வது கார்கில் வெற்றி தினம் அணுசரிக்கப்படுகிறது.இன்றைய நாளில் நாம் நமக்காக உட்சபட்ச தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுதல் வேண்டும்.இதே நாளில் 1999ல் தான் பாக் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை நமது வீரர்கள் திரும்ப கைப்பற்றினர்.முழுவதும் உயர்மலைப்பகுதிகளிலேயே தான் இந்த போர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதே நாளில் தான் உயர்ந்த மலைப்பகுதிகளில் பத்திரமாக உட்கார்ந்து கொண்டு தேசிய நெடுச்சாலை 1ஐ பாக் படைகள் குண்டுவீசி தாக்கின.காஷ்மீரின் மற்ற பகுதிகளை கார்கிலுடன் இணைக்கும் ஒரே சாலை இதுவாக தான் இருந்தது.வீரர்கள் கவலை கொள்ளவில்லை.விமானப்படை உதவியுடன் வீரர்கள் இலக்கை நோக்கி வெற்றிநடை போட்டனர்.

டோலோலிங் மற்றும் டைகர் ஹில் பகுதிகள் மீட்கப்பட்டன.சர்வதேச அழுத்தம் காரணமாக உலக அளவில் தலைகுனிந்தது பாகிஸ்தான்.ஜீலை 26ல் அனைத்து பாக் படைகளும் விரட்டியடிக்கப்பட்டன.இந்த தினத்தை தான் நாம் கார்கில் வெற்றிதினமாக வருடந்தோறும் கொண்டாடுகிறோம்.527 வீரர்களின் உயிர்தியாகத்தால் கிடைத்த வெற்றி..

படாலிக் செக்டாரில் மேஜர் சோனம் அவர்கள் லடாக் ஸ்கௌட் வீரர்களை வழிநடத்தி பாக் படைகளை வீழ்த்தினார்.அவருக்கு மகாவீர்சக்ரா வழங்கி பெருமை கொண்டது இந்தியா.

ஆபரேசன் விஜய்

கார்கில் போர் நமது சமகாலத்தில் நடைபெற்ற போர் என்பதாலும் தொலைக்காட்சிகளால் நேரடியாக கானொளிகள் அதிகம் பரப்பப்பட்ட போர் என்பதாலும் அதிக கவனம் பெறுகிறது.பாக் படைகள் நமது எல்லைக்குள் நுழைந்து உயர்மலைபகுதிகளை ஆக்கிரமித்தது.இவர்களை அடித்து துரத்த விமானப் படை மற்றும் இராணுவம் இணைந்து பணியாற்றின.

அதிஉயர் மலைப்பகுதிகளில் இந்த போர் நடைபெற்று என்பது குறிப்பிடத்தக்கது.இரு அணுஆயுத நாடுகள் முதல் முறையாக கன்வென்சனல் போர் முறை மேற்கொண்டது வரலாறு.

“செர்ஷா ” விக்ரம் பத்ரா

நாட்டிற்காக போர்களம் சந்தித்து 24 வயதில் உட்சபட்ச தியாகம் செய்து இராணுவத்தின் உயர்ந்த விருதான பரம்வீர் சக்ரா பெற்றவர்.

மனோஜ் குமார் பாண்டே,யோகேந்திர சிங் யாதவ் என பல வீரர்களின் வரலாறுகளை ஏற்கனவே நமது பக்கத்தில் பதிவு செய்துள்ளோம்.டோலோலிங் மீட்பு குறித்து விரிவான ஆர்டிகில் நமது தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது..நீங்கள் விரும்பினால் இன்று ஒரு நாள் முழுவதும் அவற்றை மறுபதிவு செய்ய தயாராக உள்ளேன்..

ஒரு கசப்பான உண்மை என்னவெனில் தமிழில் இந்த வீரர்களின் வரலாறுகள் கவனிக்கப்படவே இல்லை.ஒரு சினிமா செய்திக்கு கிடைக்கும் வரவேற்று ஒரு வீரரின் வரலாற்று பதிவுக்கு கிடைப்பதில்லை…இது எனது நேரடி அனுபவமாக உள்ளது.

மீள்பதிவு குறித்து கமென்ட் செய்யுங்கள் நண்பர்களே..!