
சீனாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வியட்நாமில் பணி செய்து வந்த 21 சீனர்களை வியட்நாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹோய் ஆன் டவுனில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடியுரிமை பணி அதிகாரிகளை கண்ட சீனர்கள் தப்பி ஒட முயன்றுள்ளனர், ஆனால் நால்வர் மாட்டி கொண்டனர்.
மீதமிருந்தவர்களையும் தேடி கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி தனிமைபடுத்தலில் வைத்துள்ளனர்.
இவர்கள் ஊடுருவியது எப்படி என பிறகு விசாரிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.