Day: July 21, 2020

வாசலில் எதிரி…100 அவசர ஒப்பந்தங்களில் இந்திய படைகள்..!

July 21, 2020

லடாக்கில் நிலைமை மோசமாகி வருவதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தகளை மேற்கொண்டு வருகிறது இந்திய பாதுகாப்பு படைகள் . இராணுவத்திற்கு நிதி உதவிகள் வழங்குவதில் எந்த தடங்களும் இல்லை எனவும் தேவையான நிதி உதவிகள் விரைவாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசர நிதியாகவும் இராணுவத்திற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இராணுவத்தின் டி-72 மற்றும் டி-90 முதன்மை டேங்குகளுக்காக armour-piercing fin-stabilised discarding sabot (APFSDS) குண்டுகள்,ஹெரோன் ட்ரோன்கள்,மனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள்,கண்ணிவெடிகள்,அதிஉயர்பகுதிகளில் உபயோகிக்கப்படும் […]

Read More

இந்தியாவிற்குள் ஊடுருவ காத்திருக்கும் 60 பயங்கரவாதிகள்

July 21, 2020

இந்திய இராணுவத்தின் மொத்த கவனமும் லடாக்கில் குவிந்திருக்கும் நிலையில் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 50-60 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர்களில் பெரும்பான்மையானோர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அஷ்பக் பர்வால் என்ற பயங்கரவாதியின் தலைமையில் ஆறு பயங்கரவாதிகள் நௌசேரா பகுதியிலும் ,பிம்பர் காலி பகுதியில் ஐந்து பயங்கரவாதிகளும் ஊடுருவ தயாராக இருப்பதாக வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளன. இது போல எல்லையின் பல்வேறு பகுதியில் பயங்கரவாதிகள் சிறிய […]

Read More

சீன எல்லைக்குச் செல்லும் “பாரத்” ட்ரோன்கள்

July 21, 2020

இந்திய-சீன எல்லையில் தற்போதும் பிரச்சனை நீடித்து வருகிறது.சீனப்படைகள் இன்னும் பங்கோங் ஏரி பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை. அதிஉயர் மலைப்பகுதிகளால் ஆனாது இந்த லடாக் பகுதி.இந்த பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்த டிஆர்டிஓ தயாரிப்பு பாரத் ட்ரோன்களை இந்திய இராணுவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியத் தயாரிப்பான இந்த ட்ரோன் அதிஉயர மலைப்பகுதிகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்க இந்திய இராணுவத்திற்கு உதவும். டிஆர்டிஓ வின் சண்டிகர் கிளை இந்த ட்ரோனை மேம்படுத்தியுள்ளது.உலகின் சிறந்த இலகுரக கண்காணிப்பு ட்ரோனாக இந்த பாரத் […]

Read More

இஸ்ரேலிய தாக்குதலில் வீழ்த்தப்பட்ட ஈரானிய தளபதி !!

July 21, 2020

சிரிய தலைநகர் டமாஸ்கஸ் நகரின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிக முக்கியமான ஈரானிய தளபதி ஒருவர் வீழத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டமாஸ்கஸ் நகரில் ஈரானிய தளபதிகள் மற்றும் ஹெஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்திய கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஈரானின் ஜெனரல் அலி ஹஜ் ஹூசைன் வீழ்த்தப்பட்டுள்ளார், இவருடன் பலரும் இறந்துள்ளனர். அதேபோல் சிரியாவின் டாரா, குனைட்ரா, கிஸ்வாஹ் உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை […]

Read More

கொரோனாவால் உயிர் இழக்கும் துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ மத்திய அரசு முடிவு !!

July 21, 2020

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் மத்திய துணை ராணுவ படைகள் கொரோனாவால் உயிர் இழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் திட்டத்திற்கு அனுமதி கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான திட்ட வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி வேண்டி துணை ராணுவ படையினர் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய உள்துறையால் தொடங்கப்பட்ட பாரத் கே வீர் திட்டத்தின் கீழ் வீரர்களுக்கு உதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. […]

Read More

சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த ட்ரம்ப் நிர்வாகம் வகுத்துள்ள மிகப்பெரிய திட்டம் – முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி !!

July 21, 2020

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற மிக முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தவர் ஸ்டீஃபன் கெவின் பான்னன்.அதிபர் ட்ரம்ப் உடைய வெற்றிக்கு பின்னரும் வெள்ளை மாளிகையில் தலைமை வியூக அமைப்பாளராக அவர் பணியாற்றினார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்த மிகப்பெரிய திட்டம் ஒன்றை தீட்டி உள்ளதாக கூறியுள்ளார். இதில் இந்தியா, ஜப்பான் உட்பட பல நட்பு நாடுகளை ஆதரிப்பதும் அடங்கும் எனவும் […]

Read More

11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தடை விதிப்பு !!

July 21, 2020

அமெரிக்க அரசு உய்குர் மக்களை சித்திரவதை செய்வதில் தொடர்புடைய 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதாவது அதிக அளவில் சிறையில் அடைப்பது, கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது, தனி ஒருவரின் அனுமதி இன்றி பயோமெட்ரிக் தரவுகளை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு உய்குர் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த அடக்குமுறைகளில் தொடர்புடைய 11 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில் சாங்ஜி எஸ்குவெல் டெக்ஸ்டைல், ஹெஃபெய் பிட்லான்ட் இன்ஃபார்மேஷன் […]

Read More

ஆசியாவைும் தாண்டி…! நீர்நில தாக்கும் படைப்பிரிவு பலத்தை அதிகரிக்கும் சீனக் கடற்படை

July 21, 2020

அமெரிக்காவை அடக்கும் பொருட்டும் அமெரிக்கா சீனாவை தாக்கும் பொருட்டு சீனக்கடல் பகுதியிலேயே அமெரிக்காவிற்கு கடும் பதிலடி கொடுக்க 1990களில் தனது படைப்பலத்தை அதிகரிக்க சீனா முடிவெடுத்தது.தற்போது எந்தபகுதியிலும் அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் அளவிற்கு தனது படைப்பலத்தை சீனா அதிகரித்துள்ளது. சீனா தற்போது தனது புதிய இரு டைப்075 ஆம்பிபியஸ் தாக்கும் கப்பல்களை லாஞ்ச் செய்துள்ளது.அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவுக்கு இணையானதொரு படைப்பிரிவை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.தொலைதூரத்தில் நடக்கும் போருக்கு அனைத்து ஆயுதங்களுடன் தனியாகவே களம் காணும் வண்ணம் […]

Read More

பாக் தாக்குதலில் இருந்து மக்களை காக்க பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரம்

July 21, 2020

பாக்கின் மோர்ட்டார் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் பங்கர்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல நாட்கள் தங்கும் அளவுக்கு அனைத்து வசதிகளும் இந்த பங்கர்கள் இருக்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.ஒவ்வொரு பங்கரும் பத்துலட்சம் என்ற செலவில் கட்டப்பட்டு வருகிறது.இந்த பங்கருக்குள் ஒரு வாஷ் ரூம் மற்றும் மற்ற இரு ரூம்கள் இருக்கும். போனியார் மற்றும் உரி பகுதிகளில் 18 பங்கர்கள் அமைக்கப்பட உள்ளது.தற்போது ஆறு பங்கர்களுக்கான கட்டுமானம் […]

Read More

அடுத்த வருடம் இந்தியா வரும் 4 புதிய பி8ஐ விமானங்கள், சீன பாகிஸ்தான் கடற்படைகளுக்கு பெரும் சவால் !!

July 21, 2020

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிகள் கப்பல் எதிர்ப்பு, கண்காணிப்பு, எலக்ட்ரானிக் முடக்குதல் ஆகிய திறன்கள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளன. அடுத்த வருடம் அமெரிக்காவிடம் நாம் ஆர்டர் செய்த 4 புதிய பி8ஐ பல்திறன் விமானங்கள் இந்தியா வர உள்ளன, இவை வந்து சேரும் பட்சத்தில் மேற்கு கடலோர பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படை நடமாட்டங்களை கண்காணிக்க உதவும், இதன் மூலம் அப்பகுதியில் நமது பலம் கணிசமாக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இதைத்தவிர மேலும் கூடுதலாக இத்தகைய 6 […]

Read More