Day: July 19, 2020

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் கடலோர நீர்மூழ்கிகள் !!

July 19, 2020

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் ஏற்கனவே இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு கப்பல்கள் மற்றும் ரோந்து கலன்களை தயாரித்து வழங்குகிறது தெரிந்த விஷயம் தான். இதைத்தவிர கே9 வஜ்ரா, தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்கள் மற்றும் எதிர்கால காலாட்படை சண்டை வாகனம் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு கடலோர நீர்மூழ்கிகள் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த கடலோர நீர்மூழ்கிகள் (COASTAL SUBMARINES) மிக சிறிய ஆனால் லாவகமாக ஆழம் […]

Read More

இந்த வருடத்தில் 134 புதிய போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் !!

July 19, 2020

இந்திய விமானப்படை 134 புதிய போர் விமானங்களை வாங்கும் வகையில் இந்த வருடத்திற்குள் ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய உள்ளது. இந்த 134 போர் விமானங்களில் 33 ரஷ்ய தயாரிப்பு ஆகும். 21 மிக்29 யுபிஜி மற்றும் 12 சு30 எம்.கே.ஐ ஆகிய விமானங்கள் அடக்கம். இதன் பிறகு 83 தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானங்களுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 18 தேஜாஸ் மார்க்-1 பயிற்சி விமானங்களையும் வாங்க இந்திய விமானப்படை […]

Read More

போர் ஒத்திகை: இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் நிமிட்ஸ் ரக விமானந்தாங்கி கப்பல் !!

July 19, 2020

நேற்று முன்தினம் அமெரிக்க கடற்படையின் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் இந்திய பெருங்கடல் நோக்கி அதிவேகத்தில் விரைவதாக பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் அக்கப்பல் நேற்று காலையே இந்திய பெருங்கடல் பகுதியில் வந்து சேர்த்துள்ளது. இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் அந்தமான் அருகே போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவுடனான பிரச்சினை நடைபெறும் சமயத்தில் இந்த நிகழ்வு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத இறுதியில் இதை போல ஜப்பானிய கடற்படையுடன் இந்திய கடற்படை […]

Read More

எல்லைக்கு அனுப்பப்படும் ரபேல் விமானங்கள்??

July 19, 2020

இந்தியா புதிதாக வாங்கியுள்ள ரபேல் விமானங்கள் எல்லைக்கு அனுப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.எல்லையில் சீன இராணுவத்தை பின்வாங்கச் செய்வது மிக சவாலான பணியாக உள்ளது.என்னவேன்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழ்நிலை நீடித்து வருவதால் தற்போது இந்தியா தனது பலத்தை லடாக்கில் பெருக்கி வருகிறது. இந்தியாவின் கோரிக்கைப்படி பிரான்ஸ் ரபேல் விமான டெலிவரியின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.வரும் ஜீலை 27 நான்கு விமானங்கள் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் தற்போது 6 விமானங்கள் இந்தியாவின் அம்பாலா தளம் வரவுள்ளது. கடந்த […]

Read More

சீனாவுக்கு எதிரான மலபார் போர்பயிற்சியில் ஆஸ்திரேலியா நிரந்தரமாக இணையுமா?

July 19, 2020

இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள மலபார் கடற்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியா இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.தற்போது அமெரிக்கா,ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.இதில் ஆஸ்திரேலியாவும் நிரந்தர உறுப்பினராக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயலும் இந்திய பெருங்கடலிலேயே தான் இந்த மலபார் 2020 போர்பயிற்சியும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மட்டுமே ஆஸ்திரேலியா கடற்படை இந்த மலபார் பயிற்சியில் கலந்து கொண்டது.அதன் […]

Read More

விமானப்படைக்காக புதிய ஸ்மார்ட் வான்தள தகர்ப்பு குண்டுகள் வாங்க திட்டம்

July 19, 2020

இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்காக உள்நாட்டு தயாரிப்பு ஸ்மார்ட் விமானதள தகர்ப்பு குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சுமார் 500 என்ற அளவில் இந்த குண்டுகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ Smart Anti Airfield Weapon (SAAW) என்ற குண்டை மேம்படுத்தி வருகிறது.100கிமீ சென்று தாக்கும் வல்லமை பெற்ற இந்த குண்டை கடந்த 2018ல் டிஆர்டிஓ சோதனை செய்தது. 120கிகி எடையுடைய இந்த குண்டு விமான ஓடுதளம்,பங்கர்கள்,விமான ஹேங்கர்கள் மற்றும் மற்ற கடினமான […]

Read More

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் மூன்று வகையான தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்கள் !!

July 19, 2020

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் கே9 வஜ்ரா, காட்டுபள்ளி கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டுமானம், எதிர்கால காலாட்படை சண்டை வாகன தயாரிப்பு பணிகளின் மூலமாக நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் மூன்று வகையான தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்களை தயாரித்துள்ளது, இவற்றை இந்திய அரசு வாங்குமா என்பதற்கு தற்போது பதில் இல்லை. அந்த மூன்று தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்களை பற்றி பார்க்கலாம். 1) AUV […]

Read More

தென் கொரியா மற்றும் ஜெர்மனியில் இருந்து படைகளை குறைக்க அமெரிக்கா பரிசீலனை !!

July 19, 2020

அமெரிக்க அரசு தென்கொரியா மற்றும் ஜெர்மனியில் உள்ள தனது ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவில் சுமார் 28,500 அமெரிக்க படையினர் நிலைநிறுத்தபட்டு உள்ளனர். தற்போது அவர்களுக்கான செலவு விகிதத்தை தென் கொரியா அதிகம் ஏற்றுக்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டும் தென் கொரிய அரசிடம் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில் படைக்குறைப்பு நடவடிக்கை குறித்து அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் பரிசிலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு […]

Read More

இந்தியாவை சாபஹார் ரயில்வே திட்டத்தில் இருந்து விலக்கவில்லை: ஈரான் !!

July 19, 2020

ஈரானிய அரசு இந்தியாவை சாபஹார் ரயில்வே திட்டத்தில் இருந்து வெளியேற்றியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை மறுத்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் ஈரான் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே இல்லை என ஈரானிய துறைமுகங்கள் துறை அதிகாரியா ஃபர்ஹாத் மான்டெஸார் கூறியுள்ளார். அதே நேரத்தில் சாபஹார் துறைமுக திட்டத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும், அமெரிக்க தடைகள் இந்திய ஈரான் நட்புறவை பாதிக்காது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா சாபஹார் துறைமுக திட்டத்திற்கு சிறப்பு விலக்கை அளித்தது […]

Read More

அமெரிக்காவில் இந்தியா கச்சா எண்ணெயை சேகரித்து வைக்க திட்டம் !!

July 19, 2020

இந்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தராமேந்திர ப்ரதான் மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் டேன் ப்ருய்லெட் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் இந்தியா அமெரிக்காவில் தனது கச்சா எண்ணெயை சேகரித்து வைக்கும் முடிவு மிக முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய அமெரிக்க முலோபாய எரிசக்தி பங்களிப்பு திட்டத்தின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடையாளம் தெரிவிக்க விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் இந்திய […]

Read More