இந்தியா ஒரு வீக்கான நாடு அல்ல; உலகின் எந்த படையும் இந்தியாவில் இரு இன்ச் நிலத்தை கூட எடுக்க முடியாது என லடாக்கில் இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் பேசியுள்ளார். இரு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள அமைச்சர் லே பகுதியில் உள்ள ஸ்டாக்னா என்னும் இடத்திற்கு பயணம் செய்தார்.லுகுங் என்னுமிடத்தில் உள்ள காவல் நிலைக்கு சென்ற அவர் இந்திய வீரர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் யாரும் ஒரு இன்ச் நிலத்தை கூட […]
Read Moreசமீபத்தில் அமெரிக்கா ஒலியை விடவும் 17 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய ஆயுதம் ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆயுதம் ஒரு ஹைப்பர்சானிக் மிதவை வாகனம் எனவும் இதனால் அணு ஆயுதங்களை சுமக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா ஒலியை விடவும் 17 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லும் ஆயுதம் ஒன்றை சோதனை செய்ய உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது. மூத்த அமெரிக்க பாதுகாப்பு […]
Read Moreஜூலை 14ஆம் தேதி காலையில் கங்கென் தீவுக்கு அருகே உள்ள ஜாவா கடல் பகுதியில் இந்தோனேசிய கடற்படை கப்பல் ஒன்று மூழ்கி உள்ளது. மூழ்கிய கப்பல் கே.ஆர்.ஐ. தெலுக் ஜகார்த்தா 51 எனும் நடுத்தர படைக்குவிப்பு கலன் என கூறப்படுகிறது. இந்த கப்பல் 1900 டன்கள் எடையும், 600 டன்கள் சுமைதிறனும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் இருந்து 55 வீரர்களும் மீட்கப்பட்டு உள்ளனர், மோசமான வானிலை காரணமாக கடல்நீர் உட்புகுந்து கப்பல் மூழ்கி உள்ளதாக தகவல்கள் […]
Read Moreஅமெரிக்க கடற்படையின் முன்னனி போர்கப்பல்களில் ஒன்று யு.எஸ்.எஸ். போன்ஹாமி ரிச்சர்ட். இது நமது விக்ரமாதித்யா அளவுக்கு பிரமாண்டமான கப்பல் ஆகும், இது உலகின் எப்பகுதியிலும்அமெரிக்க படைகளை குவிக்க உதவும் கலன்களில் ஒன்றாகும். கடந்த 12ஆம் தேதி சான் டியகோ கடற்படை தளத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் காலை 8.30 மணிக்கு தீ பிடித்துள்ளது. இதனையடுத்து கப்பலில் தீ வேகமாக பரவியது, மேலும் நீண்ட நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீயால் கப்பலின் கட்டுபாட்டு பகுதி […]
Read Moreசிரியாவில் ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு மையம் மீது துருக்கி தாக்குதல் நடத்தி உள்ளது. துருக்கி ஆளில்லா விமானம் மூலமாக நடத்திய இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவின் பதிலடி என்னவாக இருக்கும் என சர்வதேச பார்வையாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
Read Moreஇந்தியா மற்றும் பூட்டான் இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கு வங்காள மாநிலம் ஜெய்கோன் பகுதியை பூட்டானுடைய அஹ்லய் மற்றும் பஸாகா பகுதிகளை இணைக்கும் பாதை திறக்கப்பட்டுள்ளது. பூட்டானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் இதுகுறித்து பேசுகையில் இந்த புதிய பாதை இருநாடுகளுக்கும் இடையிலான சிறப்புமிக்க உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார். மேலும் பூட்டான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பகுதியில் ஒரு சுங்க இலாகா அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா பூட்டானுடைய மிகப்பெரிய […]
Read Moreரஷ்ய அரசுத்துறை ஊடகம் ஸ்வேஸ்தா கப்பல் கட்டும் தளத்தில் உலகின் மிகப்பெரிய அணுசக்தியால் இயங்கும் பனி உடைப்பான் கப்பலை கட்ட துவங்கி உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 70,000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பல் ரஷ்ய கடற்படையின் அட்மிரல் குஸ்நெட்ஸோவ் விமானந்தாங்கி கப்பலை விட பெரியதாகும். லீடர் என இந்த ரகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உலகின் சக்தி வாய்ந்த அணு உலைகளில் ஒன்று பொருத்தப்பட உள்ளது என்பது கூடுதல் தகவல். இந்த கட்டுமான […]
Read Moreஇந்தியாவும் இஸ்ரேலும் வேகமாக டிஜிட்டல்மயமாகி வரும் உலகில் சைபர் தாக்குல்களை இணைந்து கையாள ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குநர் ஜெனரல் யிகால் உன்னா மற்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. இதுகுறித்து யிகால் உன்னா கூறுகையில் இந்த ஒப்பந்தம் இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவில் மற்றொரு மைல்கல் எனவும், இருதரப்பினரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் சைபர் தாக்குதல்களை கையாள்வது எளிதாகும் எனவும் […]
Read Moreஃபிலிப்பைன்ஸ் அரசு அமெரிக்காவிடம் இருந்து 2 புதுப்பிக்கப்பட்ட சி130 ஹெச் ரக விமானங்களை பெற உள்ளதாக அறிவித்து உள்ளது. முதல் விமானம் ஜூலை இறுதியிலும், இரண்டாவது விமானம் இந்த வருட இறுதியிலும் வரும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் ஃபிலிப்பைன்ஸ் விமினப்படையை நவீனப்படுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும், மேலும் இத்திட்டம் அமெரிக்க அரசிடம் இருந்தும் நிதியை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதில் 17.30 மில்லியன் டாலர்களையும் ஃபிலிப்பைன்ஸ் அரசு 30.76 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் […]
Read Moreகாஷ்மீரின் குல்கமில் காலை நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவம் வீழ்த்தியுள்ளது. காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் நாக்நாட்-சிம்மர் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதியும் வீழ்த்தப்பட்டுள்ளான். சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் காவல் துறையின் சிறப்பு அதிரடி படை,சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 9வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு ஆகியவை இணைந்து உளவுத் தகவல்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த போது […]
Read More