Day: July 16, 2020

பயங்கரவாத ஊடுருவலை தடுத்து நிறுத்திய வீரர்கள்;ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்

July 16, 2020

இன்று காலை குப்வாரா மாவட்டத்தின் கேரன் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்துக்கு உரிய நபர்களின் நடமாட்டத்தை நமது இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர். விரைவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதை இந்திய இராணவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.அதன் பிறகு நமது வீரர்கள் அந்த பயங்கரவாதிகளை தடுத்து அழிக்க ஆபரேசனை தொடங்கினர். இந்ண ஆபரேசனில் ஊடுருவ முயன்ற ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.ஒரு ஏகே துப்பாக்கி பறிமுதல் செய்துள்ளது நமது இராணுவம். சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக […]

Read More

ஜப்பானின் புதிய மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் கப்பல் தகர்ப்பு ஏவுகணை குறித்து வெளியான ஆச்சரிய தகவல்கள்

July 16, 2020

ஜப்பான் சொந்தமாக தயாரித்துள்ள சூப்பர்சானிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான ASM-3ஐ உலகுக்கு வெளிக்காட்டியுள்ளது.இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் மிர்சுபிஷி கனரக தொழிற்சாலை பயணத்தின் போது வெளியிடப்பட்டுள்ளது. ASM-3 நீண்ட தூரம் உள்ள இலக்குகளை தாக்கும் வானில் இருந்து போர்க்கப்பல்கள் நோக்கி ஏவப்படக்கூடிய சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.ஜப்பான் விமானப்படையின் F-2 பலபணி போர்விமானங்களில் வைத்து இந்த ஏவுகணையை ஏவ முடியும். active / passive radar composite seeker தொழில்நுட்பத்தால் வழிகாட்டப்பட்டு ஏவுகணை மிகத்துல்லியமாக […]

Read More

நார்வே நாட்டு நிறுவனத்திற்கு கப்பல் கட்டும் கொச்சி கப்பல் கட்டுமான தளம் !!

July 16, 2020

நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான கொச்சி கப்பல் கட்டுமான தளம் நார்வே நாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கப்பல் கட்டி கொடுக்க உள்ளது. நார்வே நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான நார்ஜேஸ் குருப்பன் ஏ.எஸ்.ஏ நிறுவனத்தின் ஒரு பிரிவான ஏ.எஸ்.கே.ஒ மேரிடைம் ஏ.எஸ் நிறுவனம் தான் இந்த ஆர்டரை வழங்கி உள்ளது. இதன்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தை உபயோகித்து இயங்கும் இரு தன்னாட்சி கப்பல்களை கட்டி கொடுக்க வேண்டும். இந்த கப்பல்கள் 67 மீட்டர் […]

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீன உதவியுடன் கட்டப்படும் அணை !!

July 16, 2020

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அணை கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த அணை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டப்பட உள்ளது, இதனை டயாமர் பாஷா அணை என அழைக்கின்றனர். இந்த அணைக்கட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜீத் பல்டிஸ்தானில் பாயும் உள்ள சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட உள்ளது. நாற்பது வருடங்களில் நான்கு பாகிஸ்தான் பிரதமர்கள் இந்த கட்டுமான பணிகளை துவங்கி வைத்தும் பணிகள் நடைபெறவில்லை ஆனால் இம்முறை […]

Read More

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து எல்லையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் : சீன வெளியுறவு அமைச்சகம் !!

July 16, 2020

சீனாவின் அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா மற்றும் சீனா ஆகியவை எல்லையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் பேசுகையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எல்லையில் அமைதியை நிலைநாட்டலாம் என கூறியுள்ளார். நேற்று இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இத்தகைய அறிக்கையை சீனா வெளியிட்டு உள்ளது […]

Read More

இந்தியா அமெரிக்காவுக்கு நல்ல நட்பு நாடு : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் !!

July 16, 2020

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ செவ்வாய் கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியா அமெரிக்காவுக்கு நல்ல நட்பு நாடு என குறிப்பிட்டார். மேலும் தனது இந்திய சகாவான வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உடன் அடிக்கடி பேசி வருவதாகவும், இந்தியா மற்றும் சீனா கடையேயான பிரச்சினை குறித்தும் பேசியதாகவும் கூறினார். மேலும் பேசுகையில் இந்தியா சீன செயலிகளை தடை செய்ததை சுட்டி காட்டிய அவர் உலகத்தில் உள்ள நாடுகள் பல ஒரு பெரிய சவாலை வீழ்த்த தயாராக […]

Read More

14 நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து விட்டு 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினை : சீன அடாவடித்தனம் !!

July 16, 2020

சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது, ஆனால் சுமார் 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினையை கொண்டுள்ளது. இந்த விசித்திரமான சீன நடவடிக்கை எந்தெந்த நாடுகளுடன் பிரச்சினையை கிளப்பி உள்ளது என பார்க்கலாம். 1) பூட்டான் – குலா காங்க்ரி மலை, ஹா மாவட்டம் மற்றும் செர்கிப் கோம்பா,தோ, சன்மார், டன்மார், தார்சென் உள்ளிட்ட பல பகுதிகள். 2) ப்ருனய் – ஸ்ப்ரால்டி தீவுகள். 3) கம்போடியா 4) இந்தியா – அக்ஸாய் சின், அருணாச்சல […]

Read More

சீனாவிடம் இருந்து வாங்கிய 6 விமானங்களை பயன்படுத்த முடியாத நிலையில் நேபாளம் !!

July 16, 2020

நேபாள அரசு சீனாவிடம் சில விமானங்களை தனது நாட்டிற்கு பரிசாக அளிக்கும் படி நிர்பந்தம் செய்து வந்த நிலையில் சீனா முதலில் சில விமானங்களை வாங்கினால் பிறகு பரிசளிக்கலாம் என தெரிவித்தது. இதனை அடுத்து நேபாள அரசு சீன விமானங்களை வாங்க முடிவு செய்து ஆய்வு குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்பி உள்ளது. அங்கு சீனா தனது 56 இருக்கைகள் கொண்ட MA60 மற்றும் 17 இருக்கைகள் கொண்ட Y12R ஆகிய விமானங்களை காண்பித்தது, இவற்றை வாங்க […]

Read More

தனது இழப்பை மூடிமறைக்க சீனா முயற்சி, தனது நாட்டு வீரர்களுக்கு எவ்வித மரியாதையும் அளிக்கவில்லை : அமெரிக்க உளவு தகவல் !!

July 16, 2020

கல்வான் பள்ளதாக்கில் நடந்த மோதலின் போது நமது தரப்பில் 20 வீரர்களை நாம் இழந்தோம் அவர்களுக்கு தகுந்த ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. அதுவே சீனாவில் தனது இழப்பை மூடிமறைக்கும் கேவலமான செயலில் அந்நாட்டு அரசு இறங்கி உள்ளது. நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினரை அரசு இழிவுபடுத்தி வருவதாகவும், வீர மரணம் அடைந்த பல வீரர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வில்லை எனவும் அமெரிக்க உளவு தகவல் வெளியாகியுள்ளது. […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் 5 தளங்களில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிய அமெரிக்கா !!

July 16, 2020

கடந்த ஃபெப்ரவரி மாதம் கத்தார் நாட்டில் வைத்து அமெரிக்க அரசும் ஆஃப்கன் தலிபான்களும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி படைகளை வாபஸ் வாங்குவது மிக முக்கியமான வாக்குறுதி ஆகும், அதன்படி தற்போது சில ஆயிரம் துருப்புகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்று கொண்டுள்ளது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஸல்மாய் கலில்ஸாத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் “ஒப்பந்தம் கையெழுத்தாகி 135ஆவது நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் அமெரிக்கா தான் […]

Read More